இந்திய அணியின் சாதக, பாதகங்கள்

ஆசிய கண்டத்துக்கு வெளியே நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் 4-ஆவது இன்னிங்ஸில் இந்திய துவக்க ஜோடி கடந்த 2006-ஆம் ஆண்டில் தான் 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. 
இந்திய அணியின் சாதக, பாதகங்கள்

விஜய், ஷிகர் தவன் துவக்க ஜோடி தலா 20, 26 ரன்களுடன் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் அந்நிய ஆடுகளங்களில் இந்த ஜோடி 3-ஆவது முறையாக முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்துள்ளது. முன்னதாக 2014-ல் பிரிஸ்பேன், அதே ஆண்டில் மெல்போர்ன் மற்றும் தற்போது பார்மிங்ஹாம் மைதானங்களில் எடுத்துள்ளனர். மொத்தம் 24-ஆவது முறையாக 50+ ரன்களை இந்த ஜோடி எடுத்துள்ளது. 

இந்நிலையில், 2000-ம் ஆண்டுக்கு பிறகு தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய துவக்க ஜோடி 10 ஓவர்களைக் கடந்து பேட்டிங் செய்தது இது 3-ஆவது முறையாகும். இந்த டெஸ்டில் விஜய், தவன் ஜோடி 13.4 ஓவர்கள் களத்தில் நின்றுள்ளது. முன்னதாக, 2003-ல் பிரிஸ்பேனில் சேவாக், சோப்ரா ஜோடி 19.2 ஓவர்களும், 2011-ல் லார்ட்ஸில் கம்பீர், முகுந்த் ஜோடி 18.2 ஓவர்களும் களத்தில் நின்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தின் முன்னணி பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் விராட் கோலி இதுவரை மொத்தம் 50 பந்துகளை மட்டும் சந்தித்து 19 ரன்கள் மட்டுமே எடுத்து 4 முறை ஆட்டமிழந்துள்ளார். எனவே இவ்விரு வீரர்களுக்கு இடையிலான சவால்கள் இந்த தொடரின் 5 போட்டிகளில் கடுமையாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதுபோல ரசிகர்களும் இதை மிக ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

அந்நிய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் ஷிகர் தவன் ஆட்டம் தொடர்ந்து சொதப்பி வருகிறது. அதிரடி ஆட்டக்காரரான தவன், ஒருநாள் மற்றும் டி20-களில் ரன்கள் சேர்த்தாலும், டெஸ்ட் போட்டிகளில் தொடங்கிய சில நிமிடங்களில் குறைந்த ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறுவது தொடர்கதையாகி வருகிறது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் 22 இன்னிங்ஸ்களில் விளையாடி 3 அரைசதம் மற்றும் 1 சதத்துடன் 612 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன் சராசரி 27.81ஆகும்.

இந்நிலையில், ஆசிய கண்டத்துக்கு வெளியே நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளின் முதல் இன்னிங்ஸில் தவன் எடுத்துள்ள ரன்களின் விவரம்:

  • 13 - ஜொஹன்னஸ்பர்க், 2013
  • 00 - ஆக்லாந்து, 2014  
  • 12 - டிரெண்ட் பிரிட்ஜ், 2014
  • 25 - அடிலெய்ட், 2014
  • 84 - நார்த் சௌன்ட், 2016
  • 16 - கேப்டவுன், 2018
  • 26 - பார்மிங்ஹம், 2018

அலிஸ்டர் கூக் எதிராக இஷாந்த் ஷர்மா:

  • 13 டெஸ்ட்
  • 154 ரன்கள்
  • 465 பந்துகள்
  • 8 விக்கெட்டுகள்

ஆசிய கண்டத்துக்கு வெளியே இந்திய அணி விரட்டிப் பிடித்த வெற்றிகர இலக்குகள்:

  • 403 vs மே.இ.தீவுகள், போர்ட் ஆஃப் ஸ்பெயின், 1976
  • 230 vs ஆஸ்திரேலியா, அடிலெய்ட், 2003
  • 200 vs நியூஸிலாந்து, டுனைடன், 1968
  • 184 vs ஜிம்பாப்வே, புலவாயோ, 2001

எட்பாஸ்டனில் எடுக்கப்பட்ட வெற்றிகர இலக்குகள்:

  • 281 தென் ஆப்பிரிக்கா v இங்கிலாந்து, 2008 (5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி)
  • 208 இங்கிலாந்து v நியூஸிலாந்து, 1999 (7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி)
  • 152 மே.இ.தீவுகள் v இங்கிலாந்து, 1991 (7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி)

ஆசிய கண்டத்துக்கு வெளியே நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் 4-ஆவது இன்னிங்ஸில் இந்திய துவக்க ஜோடி கடந்த 2006-ஆம் ஆண்டில் தான் 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. அதன் பிறகு 20 முறை 4-ஆவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய துவக்க ஜோடிகளில் கடைசியாக 2015 ஜனவரியில் விஜய், ராகுல் சேர்த்த 48 ரன்கள் தான் 2-ஆவது அதிகபட்ச ரன்கள் ஆகும்.

இந்திய துவக்க வீரர் ஷிகர் தவன், கடந்த 2014-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 2-ஆவது இன்னிங்ஸில் 81 ரன்கள் எடுத்ததே, ஆசிய கண்டத்துக்கு வெளியே நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அவரது அதிகபட்சமாகும்.

ஆசிய அணிகள் அதிகமுறை தோல்வியைச் சந்தித்துள்ள அந்நிய மைதானங்கள்:

  • 17 எட்பாஸ்டன் (1962-தற்போது வரை)
  • 16 லார்ட்ஸ் (1932-82)
  • 16 கென்னிங்ஸ்டன் ஓவல் (1953-17)
  • 14 எம்.சி.ஜி (1983 -17)
  • 13 சபீனா பார்க் (1953-04)
  • 13 லார்ட்ஸ் (2001-14)
  • 13 காபா (1947-தற்போது வரை)

நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இந்திய அணி சந்தித்த அதிர்ச்சித் தோல்விகள்:

  • 12 ரன்கள் v பாகிஸ்தான், சென்னை, 1999
  • 16 ரன்கள் v பாகிஸ்தான், பெங்களூரு, 1987
  • 16 ரன்கள் v ஆஸ்திரேலியா, பிரிஸ்பேன், 1977
  • 31 ரன்கள் v இங்கிலாந்து, எட்பாஸ்டன், 2018

மிகக் குறைந்த இலக்குகளை தவறவிட்ட இந்திய அணி:

  • 120 ரன்கள் vs மே.இ.தீவுகள், பிரிட்ஜ்டவுன், 1997
  • 176 ரன்கள் vs இலங்கை, காலே, 2015
  • 194 ரன்கள் vs இங்கிலாந்து, எட்பாஸ்டன், 2018
  • 208 ரன்கள் vs தென் ஆப்பிரிக்கா, கேப்டவுன், 2018
     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com