அம்மாடியோவ்! விராட் கோலியின் 'வாலட்' இவ்வளவு விலையா?

சமீபத்தில் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட விராட் கோலியின் புகைப்படத்தில் அவர் பயன்படுத்தும் 'வாலட்' பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: Viral Bhayani
நன்றி: Viral Bhayani

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், உலக கிரிக்கெட்டின் சாதனை நாயகனாகவும், அவரது ரசிகர்களின் அரசனாகவும் திகழ்கிறார் விராட் கோலி. இதனாலேயே அவரது ரசிகர்கள் 'கிங் கோலி' என்ற செல்லப் பெயருடனே அழைக்கின்றனர்.

தற்போதைய காலகட்டத்தில் உலக கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரராக உருவெடுத்துள்ள கோலி, பல சாதனைகளைத் தகர்த்து, பேட்டிங்கில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட விராட் கோலியின் புகைப்படத்தில் அவர் பயன்படுத்தும் வாலட்டின் விலை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு விளையாட்டு வீரராக சிறந்த ஃபிட்னஸ் முறையைப் பின்பற்றி நல்ல உடல் தோற்றத்தை பெற்றுள்ள கோலி, தனது உடைகளிலும் எப்போதும் தனி அக்கறை கொண்டுள்ளார். இதனாலேயே ஒவ்வொரு முறையும் தனது சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிடும் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் கோலியின் புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் இடையே பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வரிசையில் சமீபத்தில் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட விராட் கோலியின் புகைப்படம் தான் இப்போது டிரெண்ட் ஆகி வருகிறது. அதில், அவர் பயன்படுத்தும் வாலட் பெரும் வரவேற்பையும், அதன் விலை ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஃபேஷன் வணிக நிறுவனமான லூயிஸ் வுய்ட்டனின் கறுப்பு நிற ஸிப்பி எக்ஸ்எல் ரக வாலட் தான் விராட் கோலி தனது கையில் வைத்திருப்பது. பலருக்கு கனவாக உள்ள இந்த வாலட்டின் விலை 1,250 அமெரிக்க டாலர்கள் ஆகும். இது இந்திய மதிப்பில் ரூ.81,144 மட்டுமே...!

வாலட்டில் நூறு ரூபாயை வைப்பதே பெரும்பாடாக உள்ள இக்காலகட்டத்தில் கிட்டத்தட்ட அதன் விலை மட்டுமே ஒரு லட்சத்தை தொடுவது சாதாரண மக்களுக்கு கனவாகே இருந்தாலும், பிரபல நிறுவனங்களின் விளம்பரத்தூதராக இருப்பதால் மட்டுமே ஆண்டொன்றுக்கு 144 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பாதிக்கும் விராட் கோலிக்கு இது சாதாரண விஷயம் தான்.

இருப்பினும், இவை அனைத்தும் தனது நேர்த்தியான ஆட்டத்திறனாலும், ஒழுக்கமான வாழ்க்கை முறையாலும், எதையும் கற்றுக்கொள்ளும் பண்பு காரணமாகவே சராசரி நிலையில் இருந்த விராட் கோலி, இத்தனை உச்சங்களை அடைய காரணமாக அமைந்தது என்றால் அது மிகையல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com