மோசமான பந்துவீச்சால் இரண்டாம் இடத்துக்கு இறங்கிய சென்னை! (விடியோ)

இந்த ஐபிஎல் போட்டியில், மோசமான பந்துவீச்சு சிஎஸ்கே அணிக்குப் பெரிய தலைவலியாக உள்ளது...
மோசமான பந்துவீச்சால் இரண்டாம் இடத்துக்கு இறங்கிய சென்னை! (விடியோ)

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 33-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்றது. இத்துடன் 9 ஆட்டங்களில் ஆடியுள்ள இந்த இரு அணிகளில், கொல்கத்தாவுக்கு இது 5-வது வெற்றி. சென்னைக்கு இது 3-வது தோல்வி.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 17.4 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்து வென்றது. கொல்கத்தா வீரர் சுனில் நரைன் ஆட்டநாயகன் ஆனார்.

சென்னை அணியினர் நேற்றும் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்கள். இதனால் சென்னை அணி ரன்கள் குவிக்கத் தடுமாறினாலும் கொல்கத்தா அணி மிக எளிதாகப் பந்துவீச்சை எதிர்கொண்டு 17.4 ஓவர்களிலேயே வெற்றியை அடைந்தார்கள். இந்த ஐபிஎல் போட்டியில், மோசமான பந்துவீச்சு சிஎஸ்கே அணிக்குப் பெரிய தலைவலியாக உள்ளது. அதற்குத் தீர்வு இதுவரை கிடைக்கவில்லை என்பது சிஎஸ்கே ரசிகர்களை மிகவும் வேதனைக்கு ஆளாக்குகிறது.

நேற்றைய தோல்வியினால் சென்னை அணி இரண்டாம் இடத்துக்கு இறங்கியது. ஹைதராபாத் அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஐபிஎல் 2018 - புள்ளிகள் பட்டியல்

 வரிசை   எண் அணிகள் ஆட்டங்கள்  வெற்றிகள் தோல்விகள்  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 1. ஹைதரபாத்  8 6 2 12 0.514
 2.  சென்னை  9 6 3 12 0.354
 3. கொல்கத்தா 9 5 4 10 0.240
 4. பஞ்சாப் 7 5 2 10 0.228
 5. பெங்களூர் 8 3 5 6 -0.301
 6. தில்லி 9 3 6 6 -0.450
 7. ராஜஸ்தான் 8 3 5 6 -0.726
 8. மும்பை 8 2 6 4 -0.059

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com