சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறாமல் போக வாய்ப்புண்டு! இவையெல்லாம் நடந்தால்!

ஹைதராபாத் அணி, பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறாமலும் போகலாம். அதற்கான சாத்தியக்கூறுகள்... 
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறாமல் போக வாய்ப்புண்டு! இவையெல்லாம் நடந்தால்!

இதை யாராலும் நம்பமுடியாதுதான். ஆனால், 10 ஆட்டங்களில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள ஹைதராபாத் அணி, பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறாமலும் போகலாம். அதற்கான சாத்தியக்கூறுகள் இன்னமும் உள்ளன. 

நேற்றைய ஆட்டத்தில், பெங்களூரு அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வென்றது. டாஸ் வென்ற பெங்களூரு பீல்டிங்கைத் தேர்வு செய்தது. 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் 146 ரன்களையே எடுக்க முடிந்தது. பெங்களூரு தரப்பில் சிராஜ் அபராமாக பந்துவீசி 3 விக்கெட்டையும், டிம் செளதி 2 விக்கெட்டையும், உமேஷ், சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்களை எடுத்து தோல்வியைத் தழுவியது. ஹைதராபாத் தரப்பில் ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டையும், ரஷீத்கான், கெளல், புவனேஸ்வர் குமார், சந்தீப் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன் அடிப்படையில் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது ஹைதராபாத்.

இருந்தாலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறாமல் போவதற்கு இன்னமும் வாய்ப்புண்டு. எப்படி என்று பார்க்கலாம்.

* ஹைதராபாத் மீதமுள்ள 4 ஆட்டங்களிலும் தோற்கவேண்டும். 
* மும்பை அல்லது ராஜஸ்தான் மீதமுள்ள எல்லா ஆட்டங்களையும் வெல்ல வேண்டும். மும்பை என்று வைத்துக்கொள்வோம். ராஜஸ்தான் எல்லா ஆட்டங்களையும் தோற்கிறது என்றும் வைத்துக்கொள்ளலாம். 
* சென்னை ஹைதராபாத்தைத் தோற்கடித்து, பஞ்சாப்பிடம் தோற்கவேண்டும். மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் சென்னையே வெல்கிறது. 
* கொல்கத்தா மும்பையிடம் தோற்கவேண்டும், ஆனால் பஞ்சாப், ராஜஸ்தான், ஹைதராபாத் ஆகிய அணிகளை வெல்ல வேண்டும்
* பஞ்சாப் சென்னை, பெங்களூரைத் தோற்கடிக்க வேண்டும். ஆனால் மும்பை, கொல்கத்தாவிடம் தோற்கவேண்டும். 

அதாவது மீதமுள்ள ஆட்டங்களின் முடிவுகள் இவ்வாறு அமையவேண்டும்:

மே 8: பஞ்சாப் - ராஜஸ்தான் = பஞ்சாப் (வெற்றியின் முடிவில் 14 புள்ளிகள்)
மே 9: கொல்கத்தா - மும்பை = மும்பை (10 புள்ளிகள்)
மே 10: தில்லி - ஹைதராபாத் = தில்லி (8 புள்ளிகள்)
மே 11: ராஜஸ்தான் - சென்னை = சென்னை (16 புள்ளிகள்)
மே 12: பஞ்சாப் - கொல்கத்தா = கொல்கத்தா (12 புள்ளிகள்)
மே 12: தில்லி - பெங்களூர் = பெங்களூர் (8 புள்ளிகள்)
மே 13: சென்னை - ஹைதராபாத் = சென்னை (18 புள்ளிகள்)
மே 13: மும்பை - ராஜஸ்தான் = மும்பை (12 புள்ளிகள்)
மே 14: பஞ்சாப் - பெங்களூர் = பஞ்சாப் (16 புள்ளிகள்)
மே 15: கொல்கத்தா - ராஜஸ்தான் = கொல்கத்தா (14 புள்ளிகள்)
மே 16: மும்பை - பஞ்சாப் = மும்பை (14 புள்ளிகள்)
மே 17: பெங்களூர் - ஹைதராபாத் = பெங்களூர் (10 புள்ளிகள்)
மே 18: தில்லி - சென்னை = சென்னை (20 புள்ளிகள்)
மே 19: ராஜஸ்தான் - பெங்களூர் = பெங்களூர் (12 புள்ளிகள்)
மே 19: ஹைதராபாத் - கொல்கத்தா = கொல்கத்தா ( 16 புள்ளிகள்)
மே 20: தில்லி - மும்பை = மும்பை (16 புள்ளிகள்)
மே 20: சென்னை - பஞ்சாப் = பஞ்சாப் (18 புள்ளிகள்)

மேலே சொன்னதுபோல நடந்தால் புள்ளிகள் பட்டியல் கீழ்க்கண்டவாறு இருக்கும்...

சென்னை 20 புள்ளிகள்
பஞ்சாப் 18 புள்ளிகள்
மும்பை 16 புள்ளிகள்
கொல்கத்தா 16 புள்ளிகள்
ஹைதராபாத் 16 புள்ளிகள்
பெங்களூர் 12 புள்ளிகள்
தில்லி 8 புள்ளிகள்
ராஜஸ்தான் 6 புள்ளிகள்

இதன் அடிப்படையில் சென்னை, பஞ்சாப் ஆகிய அணிகள் நேரடியாக பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறும். மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய அணிகள் 16 புள்ளிகளை வைத்திருக்கும். இந்த மூன்று அணிகளில் இருந்து 2 அணிகள் மட்டுமே பிளேஆஃப்-புக்குச் செல்லும். இதனால் நெட்ரன்ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறாமல் போக வாய்ப்புண்டு.

அப்படி எதுவும் நடக்காமல் இருக்கவேண்டும் என்றால் மீதமுள்ள 4 ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் மட்டும் ஹைதராபாத் வெற்றி பெற்றால் போதும். 18 புள்ளிகளுடன் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றுவிடும். இல்லாவிட்டால் பெரிய சிக்கல்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com