ஐபிஎல் இறுதிச்சுற்று & பிளேஆஃப் ஆட்டங்களின் நேரங்களில் திடீர் மாற்றம்!

இந்த வருட ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்று மற்று பிளேஆஃப் ஆட்டங்களின் நேரங்களில் திடீர் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்... 
ஐபிஎல் இறுதிச்சுற்று & பிளேஆஃப் ஆட்டங்களின் நேரங்களில் திடீர் மாற்றம்!

இந்த வருட ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்று மற்று பிளேஆஃப் ஆட்டங்களின் நேரங்களில் திடீர் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் ஒரு பகுதியாக தற்போது லீக் ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இவற்றில் முதல் 4 இடங்களைப் பெறும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும். மும்பையில் மே 22-ம் தேதி முதல் தகுதிச்சுற்று ஆட்டம் (குவாலிஃபையர்-1) ஆட்டமும், 27-ம் தேதி இறுதி ஆட்டமும் நடைபெறுகின்றன. மே 23-ல் எலிமினேட்டர் ஆட்டமும், 25-ல் தகுதிச் சுற்று இரண்டாம் ஆட்டமும்
கொல்கத்தாவில் நடைபெறுகின்றன.

இந்த ஆட்டங்கள் வழக்கமாக இரவு 8 மணிக்கு ஆரம்பிப்பதற்குப் பதிலாக ஒரு மணி நேரத்துக்கு முன்பு அதாவது இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

மைதானங்களுக்கு வருகிற ரசிகர்கள் வீடு திரும்புவதில் பிரச்னை எதுவும் இருக்கக் கூடாது. அவர்கள் முன்கூட்டியே வீட்டுக்குச் செல்வது நல்லது. தொலைக்காட்சிகளில் ஆட்டங்களைப் பார்க்கும் ரசிகர்கள் நீண்ட நேரம் கழித்துத் தூங்கச் செல்வதால் அடுத்த நாள், வேலைக்குச் சரியான நேரத்துக்குச் செல்வது பிரச்னையாக உள்ளது என்று புகார்கள் வந்தன. எனவே இவை குறித்து விவாதித்தோம். இதனையடுத்து இறுதிச்சுற்று & பிளேஆஃப் ஆட்டங்ளை இரவு 7 மணிக்குத் தொடங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com