கொல்கத்தா அணியால் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற முடியாது: கங்குலி கணிப்பு

கொல்கத்தா அணியால் இந்தமுறை பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற முடியாது என...
கொல்கத்தா அணியால் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற முடியாது: கங்குலி கணிப்பு

மும்பை இந்தியன்ஸ் 102 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி கண்டது. கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 18.1 ஓவர்களில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வீழ்ந்தது. மும்பை வீரர் இஷான் கிஷண் ஆட்டநாயகன் ஆனார் கடந்த 11 சீசன்களில் இரு அணிகளும் மொத்தம் 22 ஆட்டங்கள் விளையாடியதில் 18 ஆட்டங்களில் மும்பையே வென்றுள்ளது.

புள்ளிகள் பட்டியலில் மும்பை அணி 10 புள்ளிகளுடன் 4-ம் இடத்திலும் கொல்கத்தா அணி அதே 10 புள்ளிகளுடன் 5-ம் இடத்திலும் உள்ளன. 

இந்நிலையில் கொல்கஹ்தா அணி குறித்து முன்னாள் வீரர் செளரவ் கங்குலி கூறியதாவது:

மும்பை அணிக்கு எதிராக 102 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றபிறகு, கொல்கத்தா அணியால் இந்தமுறை பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற முடியாது என நினைக்கிறேன். ஆனால், அடுத்த வருடம் கொல்கத்தா அணி தகுதி பெறும் என நம்பலாம். கொல்கத்தா, மும்பை ஆகிய இரு அணிகளுக்கும் மூன்று ஆட்டங்கள் மீதமுள்ளன. இரு அணிகளும் நான்காவது இடத்துக்காகப் போட்டியிடும். கொல்கத்தா அணிக்கு பேட்டிங் பிரச்னையாக உள்ளது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com