சிக்ஸர் மழை: கொல்கத்தா 245 ரன்கள்!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 245 ரன்கள் குவித்துள்ளது. 
சிக்ஸர் மழை: கொல்கத்தா 245 ரன்கள்!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 245 ரன்கள் குவித்துள்ளது. 

இந்தூரில் நடைபெற்று வரும் ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. மும்பைக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா படுதோல்வியைத் தழுவியது. அதே நேரத்தில் ராஜஸ்தானிடம் 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் தோல்வி அடைந்தது. புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் பஞ்சாப் 3-ம் இடத்திலும் 10 புள்ளிகளுடன் கொல்கத்தா 5-ம் இடத்திலும் உள்ளன. இதனால் இரு அணிகளும் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற முனைப்புடன் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மயங்க் அகர்வால், ஃபிஞ்ச் ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்கள். திவாரிக்குப் பதிலாக ஸ்ரண் தேர்வாகியுள்ளார். கொல்கத்தா அணியில் டாம் கரனுக்குப் பதிலாக ஜவோன் சியர்லெஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ரிங்கு சிங் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சுப்மன் கில் தேர்வாகியுள்ளார்.

கொல்கத்தா வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினார்கள். லின் 17 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து டை பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் 6 ஓவர்களில் கொல்கத்தா அணி 1 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்தது. நரைனும் உத்தப்பாவும் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்ததால் 10 ஓவர்களில் ஸ்கோர் 106 ஆக உயர்ந்தது. நரைன் 26 பந்துகளில் அரை சதமெடுத்தார். ஆனால் டை வீசிய 12-வது ஓவரில் நரைன் 36 பந்துகளில் 75 ரன்களுடனும் உத்தப்பா 24 ரன்களுடன் ஆட்டமிழந்தார்கள்.  

இதன்பிறகு தினேஷ் கார்த்திக்கும் ரஸ்ஸலும் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார்கள். ரஸ்ஸல் 14 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து டை பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி 16.3 ஓவர்களில் 200 ரன்களைக் கடந்தது. ஐபிஎல் போட்டியில் இது மூன்றாவது அதிவேக 200 ரன்களாகும். ராணா 11 ரன்களில் வெளியேறினார். 

தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். கடைசி 5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்தது கொல்கத்தா. கொல்கத்தா வீரர்கள் இன்று 15 சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார்கள்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் குவித்துள்ளது கொல்கத்தா. சுப்மன் கில் 16 ரன்கள், சியர்லெஸ் 6 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். பஞ்சாப் தரப்பில் டை 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com