ஐபிஎல்-லின் தன்னிகரற்ற அணி: தவறாமல் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறும் சிஎஸ்கே!

ஐபிஎல் வரலாற்றில் ஒவ்வொரு வருடமும் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறும் ஒரே அணி, சென்னை சூப்பர் கிங்ஸ்...
ஐபிஎல்-லின் தன்னிகரற்ற அணி: தவறாமல் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறும் சிஎஸ்கே!

புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை அணி தனது பிளேஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.

முதலில் ஆடிய ஹைதராபாத் 4 விக்கெட்டை இழந்து 179 ரன்களை எடுத்தது. அதன் ஷிகர் தவன் 79, கேன் வில்லியம்ஸன் 51 ரன்களை குவித்தனர். பின்னர் ஆடிய சென்னை அணி 2 விக்கெட்டை இழந்து 180 ரன்களை எடுத்து வென்றது. அம்பட்டி ராயுடு 100, வாட்சன் 57, தோனி 20 ரன்களை எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி தனது பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது. ஹைதராபாத் அணியும் ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து விட்டது.

நேற்று மும்பை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் மும்பை வென்றிருந்தால் சென்னை அணி பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறாமலே போயிருக்கவும் வாய்ப்புண்டு (அதாவது மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் தோற்க நேர்ந்தால்). நெட்ரன்ரேட் அடிப்படையில் வெளியேறிருக்கலாம். ஆனால் மும்பையை ராஜஸ்தான் தோற்கடித்ததால் சென்னை பிளேஆஃப் செல்ல இனி எவ்வித தடையுமில்லை. மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் சென்னை தோற்றாலும் இனி பாதிப்பில்லை. 

மும்பை (10 புள்ளிகள்), பெங்களூர் (8 புள்ளிகள்), தில்லி (6 புள்ளிகள்) ஆகிய அணிகளால் சென்னையின் தற்போதைய 16 புள்ளிகளைத் தொடமுடியாது. ஹைதராபாத் பிளே ஆஃப்-புக்குச் சென்றுவிட்டது. பஞ்சாப் மீதமுள்ள மூன்று ஆட்டங்களை வென்றாலும் 18 புள்ளிகளுடன் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றுவிடும். மீதமுள்ள கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளில் ஓர் அணி மட்டுமே 16 புள்ளிகளைப் பெறமுடியும். இதன் அடிப்படையில் இனி அடுத்த இரு ஆட்டங்களில் தோறாலும் சென்னை பிளேஆஃப்-புக்குள் நுழைவதை எந்த அணியாலும் தடுக்கமுடியாது.

ஐபிஎல் வரலாற்றில் ஒவ்வொரு வருடமும் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறும் ஒரே அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் (தடையில் இருந்த இரு வருடங்களைத் தவிர). இந்தப் பெருமை வேறு எந்த அணிக்கும் கிடையாது. 

ஐபிஎல் - சென்னையின் பிளேஆஃப் தகுதி

2008 - ஆமாம் (இறுதிச்சுற்றில் தோல்வி)
2009 - ஆமாம்
2010 - ஆமாம் (சாம்பியன்)
2011 - ஆமாம் (சாம்பியன்)
2012 - ஆமாம் (இறுதிச்சுற்றில் தோல்வி)
2013 - ஆமாம் (இறுதிச்சுற்றில் தோல்வி)
2014 - ஆமாம்
2015 - ஆமாம் (இறுதிச்சுற்றில் தோல்வி)
2018 - ஆமாம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com