இறுதிப் போட்டியின்போது நான் இந்தியாவில் இருப்பேன்: ராஜஸ்தான் அணிக்கு ஷேன் வார்னே தகவல்!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 1 மாதத்துக்கு மேலாக பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன.
இறுதிப் போட்டியின்போது நான் இந்தியாவில் இருப்பேன்: ராஜஸ்தான் அணிக்கு ஷேன் வார்னே தகவல்!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 1 மாதத்துக்கு மேலாக பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. மும்பை, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, ராஜஸ்தான், பஞ்சாப், தில்லி உள்ளிட்ட 8 அணிகள் லீக் சுற்றுகளில் 56 ஆட்டங்களில் பங்கேற்றன.

புள்ளிகள் பட்டியலில் ஹைதராபாத் முதலிடத்தையும், சென்னை இரண்டாம் இடத்தையும், கொல்கத்தா மூன்றாம் இடத்தையும், ராஜஸ்தான் நான்காம் இடத்தையும் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. ஐபிஎல் கிரிக்கெட் அடுத்த கட்டமான பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. இன்று மும்பையில் நடைபெறவுள்ள முதல் தகுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஹைதராபாத்-சென்னை மோதுகின்றன.

நாளை, கொல்கத்தா-ராஜஸ்தான் மோதும் எலிமினேட்டர் ஆட்டம் கொல்கத்தாவில் இரவு நடக்கிறது. 25-ம் தேதி வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் இரண்டாவது தகுதி ஆட்டமும், 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மும்பையில் இறுதி ஆட்டமும் நடக்கின்றன. வழக்கமாக லீக் சுற்று ஆட்டங்கள் இரவு 8 மணிக்குத் தொடங்கப்பட்டன. ஆனால் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் ஒருமணி நேரம் முன்னதாக அதாவது இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளன. 

இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் ஆலோசகரான ஷேன்ன் வார்னே, சொந்த வேலை காரணமாக ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளார். அவருடைய மகன், மகள் ஆகியோரின் பிறந்தநாளைக் கொண்டாட கடந்த வாரம் மெல்போர்னுக்குச் சென்றார். இந்நிலையில் நாளைய ராஜஸ்தான் - கொல்கத்தா ஆட்டத்தின்போது தன்னால் இந்தியாவுக்குத் திரும்பமுடியாது என்றும் இறுதிச்சுற்று நடைபெறும்போது தான் அணியுடன் இணைந்துகொள்வதாகவும் நம்பிக்கையுடன் கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

பிளேஆஃப் சுற்றில் விளையாடும் ராஜஸ்தான் அணிக்கு வாழ்த்துகள். என்னால் நாளையும் வெள்ளிக்கிழமையும் உங்களுடன் இணையமுடியாது. ஆனால் ஞாயிறன்று நடைபெறவுள்ள இறுதிச்சுற்றில் உங்களுடன் இணைந்துகொள்வேன். முக்கியமான, இறுதி ஆட்டங்களில் எவ்வாறு விளையாடுவது என்பது குறித்த நம்முடைய உரையாடல்களை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். உங்களை எண்ணி நான் பெருமை கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com