ஐபிஎல் 2018: எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தார்களா யு-19 வீரர்கள்?

ஐபிஎல் 2018: எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தார்களா யு-19 வீரர்கள்?

ஒருவர் கூட அனைத்து ஆட்டங்களிலும் விளையாடவில்லை...

யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய வீரர்களில் 9 பேர் ஐபிஎல் போட்டிக்குத் தேர்வானார்கள்.

ஐபிஎல் ஏலத்தில் தேர்வான 5 வீரர்கள் கோடீஸ்வரர்களானார்கள். அதிலும் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான 16 வயது முஜீப்பை ரூ. 4 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி. இந்திய வேகப்பந்து வீச்சாளர் நாகர்கோடியை ரூ. 3.20 கோடிக்குத் தேர்வு செய்தது கொல்கத்தா.

ஐபிஎல் ஏலத்தில் தேர்வான இந்திய யு-19 வீரர்கள்

கமலேஷ் நாகர்கோடி - கொல்கத்தா - ரூ. 3.20 கோடி
ஷிவம் மாவி - கொல்கத்தா - ரூ. 3 கோடி
ஷுப்மன் கில் - கொல்கத்தா -  ரூ. 1.80 கோடி
பிருத்வி ஷா - தில்லி - ரூ. 1.20 கோடி
அபிஷேக் சர்மா - தில்லி - ரூ. 55 லட்சம்
மன்ஜோத் கல்ரா - தில்லி - ரூ. 20 லட்சம்
அனுகுல் ராய் - மும்பை - ரூ. 20 லட்சம் 

ஐபிஎல் ஏலத்தில் தேர்வான இதர நாட்டு யு-19 வீரர்கள்

முஜீப் அர் ரஹ்மான் (ஆப்கானிஸ்தான்) - பஞ்சாப் - ரூ. 4 கோடி
ஜாகிர் கான் (ஆப்கானிஸ்தான்) - ராஜஸ்தான் - ரூ. 60 லட்சம்

யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்று ஐபிஎல் போட்டியிலும் இடம்பிடித்த வீரர்கள் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தினார்கள்?

ஐபிஎல் போட்டியில் யு-19 வீரர்கள்

பிருத்வி ஷா (தில்லி): ஆட்டங்கள்: 9, ரன்கள்: 245, சராசரி: 27.22, ஸ்டிரைக் ரேட்: 153.12.
ஷுப்மன் கில் (கொல்கத்தா): ஆட்டங்கள்: 13, ரன்கள்: 203, சராசரி: 33.83, ஸ்டிரைக் ரேட்: 146.04.
அபிஷேக் சர்மா (தில்லி): ஆட்டங்கள்: 3, ரன்கள்: 63, சராசரி - 63.00, ஸ்டிரைக் ரேட் - 190.90.
ஷிவம் மாவி (கொல்கத்தா): ஆட்டங்கள்: 9, விக்கெட்டுகள்: 5, எகானமி: 9.64.

முஜீப் அர் ரஹ்மான் (பஞ்சாப்):  ஆட்டங்கள்: 11, விக்கெட்டுகள்: 14, எகானமி: 6.99.

காலில் காயம் ஏற்பட்டதால் நாகர்கோடியால் ஓர் ஆட்டத்திலும் விளையாட முடியாமல் போனது. ஆப்கானிஸ்தானின் ஜாகிர் கானும் காயம் காரணமாக ஐபிஎல்-லில் இருந்து விலகினார்.

அனுகுல் ராய் மற்றும் மன்ஜோத் கல்ரா ஆகிய இருவராலும் எந்த ஓர் ஆட்டத்திலும் இடம்பெற முடியாமல் போனது. 

*

யு-19 வீரர்களால் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒருவர் கூட அனைத்து ஆட்டங்களிலும் விளையாடவில்லை. ஷுப்மன் கில்லும் முஜீப் அர் ரஹ்மானும் அதிகமாக முறையே 13, 11 ஆட்டங்களில் விளையாடினார்கள். பிருத்வி ஷா இரு அரை சதங்கள் அடித்தும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியும் ஓரளவு கவனத்தை ஏற்படுத்தினார். ஷுப்மன் கில், 13 ஆட்டங்களில் ஓர் அரை சதம் எடுத்தார். ஆப்கானிஸ்தானின் முஜீப் 14 விக்கெட் எடுத்து தனது தேர்வை நியாயப்படுத்தினார்.

முதல்முறையாக ஐபிஎல் போன்ற ஒரு பெரிய போட்டியில் விளையாடியதால் இவர்களால் எதிர்பார்த்த அளவுக்கு முத்திரை பதிக்க முடியவில்லை என்றாலும் வருங்காலத்தில் ஐபிஎல் போட்டியில் சாதிப்பார்கள் என்கிற நம்பிக்கையை சிலர் ஏற்படுத்தியுள்ளார்கள். அந்தளவில் இந்த வருடம் சிலருக்கு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது என்று குறிப்பிடலாம்.

கமலேஷ் நாகர்கோடி
கமலேஷ் நாகர்கோடி
முஜீப்
முஜீப்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com