தினமணி இணையதளத்தின் 2018-இன் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் அணி

2018-ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் அணியை தினமணி இணையதளம் தேர்வு செய்து வெளியிட்டுள்ளது .
தினமணி இணையதளத்தின் 2018-இன் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் அணி


டெஸ்ட் கிரிக்கெட்டில் 2018-ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட வீரர்களை கொண்டு தினமணி இணையதளம் 2018-இன் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் அணியை உருவாக்கியுள்ளது. இந்த அணித் தேர்வு முழுக்க முழுக்க வீரர்கள் ரன் குவிப்பு, செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நடைபெற்றுள்ளது. இதில், ஒரு சில தவிர்க்க முடியாத வீரர்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். அதனால், அவர்கள் சிறந்த வீரர்கள் அல்லாதவர்கள் என்று கருதப்படவில்லை. 

கேன் வில்லியம்ஸன் (கேப்டன்) :

கடந்த ஆண்டில் நியூஸிலாந்து அணி மொத்தம் 3 டெஸ்ட் தொடர்களில் மட்டுமே விளையாடியுள்ளது. இந்த 3 தொடர்களிலும் மட்டுமே விளையாடியுள்ளது. இந்த 3 தொடர்களிலும் கேன் வில்லியம்ஸன் தனது நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். மொத்தம் 12 இன்னிங்ஸில் பேட்டிங் செய்துள்ள வில்லியம்ஸன் 3 அரைசதம், 2 சதம் உட்பட 651 ரன்கள் குவித்துள்ளார். பேட்டிங் சராசரியை 59.18 ஆக வைத்துள்ளார். அனைத்து தொடர்களிலும் சிறப்பாக விளையாடியுள்ளதால் போட்டியின்றி 3-ஆவது வீரராக அணியில் இடம்பிடித்துள்ளார். 

மேலும், கடந்த ஆண்டில் மொத்தம் 7 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி தேடித்துள்ளார். இவருடைய  வெற்றி விகிதம் 57.14 ஆக உள்ளது. தோல்வி விகிதம் வெறும் 14.28 ஆக உள்ளது. கடந்த ஆண்டு விளையாடிய 3 தொடர்களையுமே வெற்றி பெறச் செய்துள்ளார். இதில், பாகிஸ்தானில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்க வெற்றியாகும். 49 ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூஸிலாந்து அல்லாத நாட்டில் வெற்றி பெறச் செய்து சாதனை படைத்துள்ளார். வெற்றி மற்றும் தோல்வி விகிதத்தில் கோலியை காட்டிலும் நல்ல புள்ளி விவரங்களை வைத்துள்ளதால் இவர் கேப்டனாகவும் தேர்வாகியுள்ளார்.   

டாம் லாதம்:

நியூஸிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் 12 இன்னிங்ஸ் பேட்டிங் செய்து 658 ரன்கள் குவித்துள்ளார். அவருடைய பேட்டிங் சராசரி 59.81. கடந்த ஆண்டின் கடைசி கட்டத்தில் அவர் இலங்கை தொடரில் 264* மற்றும் 176 ரன்கள் எடுத்து இந்த 2 போட்டிகளில் மட்டும் 440 ரன்கள் குவித்துள்ளார். இந்த சதம் தவிர்த்து அவர் 2 அரைசதங்களும் அடித்துள்ளார். இதனால், இவர் தொடக்க ஆட்டக்காரராக இடம்பிடித்துள்ளார். 

குசால் மெண்டிஸ்:

இலங்கை அணியில் தொடக்க வீரர் மட்டுமின்றி நடுகள பேட்ஸ்மேனாகவும் களமிறங்கி ரன்களை குவித்துள்ளார். கடந்த ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில், கோலிக்கு அடுத்தபடியாக 1023 ரன்கள் குவித்து 2-ஆவது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டின் முதல் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக 196 ரன்கள் குவித்து 2018-ஐ சிறப்பாக தொடங்கினார். அதன்பிறகு, மேற்கிந்திய தீவுகள் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், அதன் பிறகு தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடரில் பெரிதளவு சோபிக்கத் தவறினார். இங்கிலாந்து தொடரின் கடைசி இன்னிங்ஸில் மட்டும் 86 ரன்கள் குவித்தார். இதையடுத்து, நியூஸிலாந்து தொடரில் ஃபார்முக்கு திரும்பிய மெண்டிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நியூஸிலாந்து தொடரின் முதல் போட்டியில், மேத்யூஸ் உடன் இணைந்து 141* ரன்கள் குவித்து போட்டியை டிரா செய்ய பெரிதளவு உதவினார். இதன் அடிப்படையில் இவர் தொடக்க ஆட்டக்காரராக இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டில் இவருடைய பேட்டிங் சராசரி 46.50.  

விராட் கோலி:

4-ஆவது வீரர் பேட்டிங் வரிசைக்கு கோலி அசைக்க முடியாத வீரராக இடம்பெறுகிறார். கடந்த ஆண்டு 24 இன்னிங்ஸில் களமிறங்கிய கோலி 5 சதம், 5 அரைசதம் உட்பட மொத்தம் 1322 ரன்கள் குவித்துள்ளார். அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் கோலி முதலிடத்தில் உள்ளார். இவருடைய பேட்டிங் சராசரி 55.08. 

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என 3 முக்கிய நாடுகளிலும் சிறப்பாகவே ரன் குவித்துள்ளார். கடந்த இங்கிலாந்து தொடரில் சொதப்பிய கோலி, இந்த எழுச்சி கண்டு 593 ரன்கள் குவித்தார். இவர் குவித்த ரன்களுக்கும், இந்த தொடர்களில் மற்ற வீரர்கள் குவித்த ரன்களுக்குமான வித்தியாசம் கணிசமாக அதிகமாகவே இருந்துள்ளது. 

ஜோ ரூட் 948 ரன்கள் குவித்தபோதிலும், சராசரி 41.21 ஆகவே வைத்துள்ளார். அதனால், கோலி அவரை முந்தியுள்ளார். 

ஏபி டி வில்லியர்ஸ்:

கடந்த ஆண்டு அனைத்து ரக சர்வதேச கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக ஏபி டி வில்லியர்ஸ் அறிவித்தார். எனினும், கடந்த ஆண்டு இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார். 14 இன்னிங்ஸில் விளையாடிய டி வில்லியர்ஸ் 6 அரைசதம், 1 சதம் உட்பட 638 ரன்கள் குவித்துள்ளார். இவருடைய பேட்டிங் சராசரி 53.16. இவர், அரைசதம் அடித்த பெரும்பாலான இன்னிங்ஸ் அணிக்கு தேவையான மிக இக்கட்டான நிலை. இவருடைய ஒரு சில இன்னிங்ஸ் போட்டியின் போக்கையே மாற்றும் வகையில் அமைந்துள்ளது. அந்த வகையில், அவர் நிகோல்ஸ், பாபர் அஸாம் உள்ளிட்டோரை பின்னுக்குத் தள்ளி 5-வது வீரராக களமிறங்குகிறார். 

ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்): 

ஜாஸ் பட்லர் கடந்த ஆண்டு 18 இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 6 அரைசதம், 1 சதம் உட்பட மொத்தம் 760 ரன்கள் குவித்துள்ளார். இவருடைய பேட்டிங் சராசரி 44.70. இங்கிலாந்து அணி சார்பில் கடந்த ஆண்டு அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில், ரூட்டுக்கு அடுத்தபடியாக அதிக ரன்களை குவித்துள்ளார். இவர் அடித்த அரைசதங்கள் மற்றும் சதம், பெரும்பாலாக இங்கிலாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பல் பேட்டிங்கை வெளிப்படுத்திய போது பின்வரிசையில் களமிறங்கி அடித்ததாகவே உள்ளது.

கடந்த ஆண்டு பெரிதளவு டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை என்றபோதிலும், சிறந்த கீப்பிங் திறன் உள்ளதால், பேட்டிங்கிலும் நல்ல சராசரி வைத்துள்ளதால் இவர் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பிடித்துள்ளார்.  

ஜேசன் ஹோல்டர்:

அணியின் பிரதான ஆல்-ரௌண்டராக ஹேசன் ஹோல்டர் இடம்பிடித்துள்ளார். கடந்த ஆண்டில் சிறந்த ஆல்-ரௌண்டர்கள் பட்டியலில் அதிகமாக கவனம் ஈர்க்கப்பட்டவர் இங்கிலாந்தின் சாம் கர்ரன். ஆனால், ஹோல்டர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அவரைவிட சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். பேட்டிங்கில் 12 இன்னிங்ஸில் 3 அரைசதம் உட்பட 404 ரன்கள் குவித்துள்ளார். பேட்டிங் சராசரி 36.72 ஆக உள்ளது. 

பந்துவீச்சில் பிரதான பந்துவீச்சாளராகவே அவர் கடந்த ஆண்டு செயல்பட்டுள்ளார். 12 இன்னிங்ஸில் 33 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். பந்துவீச்சு சராசரி 12.39 ஆக வைத்துள்ளார். ஒவ்வொரு 27.3 பந்துகளுக்கு ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சிறந்த பந்துவீச்சு சராசரி மற்றும் ஸ்டிரைக் ரேட்டில் ஹோல்டர் பிரதான பந்துவீச்சாளர்களை காட்டிலும் சிறப்பான புள்ளி விவரத்தையே வைத்துள்ளார். 4 இன்னிங்ஸில் 5 முறைக்கு மேல் விக்கெட் வீழ்த்தியுள்ளார்.  2000-ஆம் ஆண்டில் வால்ஷ்-க்கு பிறகு ஒரு ஆண்டில் 4 முறை 5 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்த ஒரே மேற்கிந்திய தீவுகள் வீரர் ஹோல்டர் ஆவார். 

ரவிச்சந்திரன் அஸ்வின்:

சுழற்பந்துவீச்சில் நாதன் லயான் கடந்த ஆண்டு 49 விக்கெட்டுகள் வீழ்த்தி சுழற்பந்துவீச்சாளர்கள் வரிசையில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுள் முதலிடத்தில் உள்ளார். மேலும், இந்தியாவுக்கு எதிரான தொடரில் 2 முறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார். அஸ்வின் 38 விக்கெட்டுகளையே வீழ்த்தியுள்ளார். 

ஆனால், அஸ்வின் பந்துவீச்சு சராசரி மற்றும் பந்துவீச்சு ஸ்டிரைக் ரேட் உள்ளிட்டவற்றில் லயானை பின்னுக்குத் தள்ளியுள்ளார். ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற வேகப்பந்துவீச்சு ஆடுகளத்தில் அஸ்வின் சொதப்பி வருகிறார் என்று வைக்கப்படும் விமரிசனங்களுக்கு கடந்த ஆண்டு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்க மண்ணில் அஸ்வின் லயானை காட்டிலும் சிறப்பாகவே பந்துவீசியுள்ளார். அதனால், அஸ்வின் சுழற்பந்துவீச்சாளராக அணியில் இடம்பிடித்துள்ளார்.  

வேகப்பந்துவீச்சாளர்கள் பொறுத்தவரை ரபாடா, பூம்ரா, கம்மின்ஸ், அப்பாஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது. கடந்த ஆண்டில் இந்த 4 பேரும் மிகச் சிறப்பாகவே பந்துவீசியுள்ளனர். இருப்பினும், தவிர்க்க முடியாத வீரராக கம்மின்ஸ் தவிர்க்கப்பட்டு பிரதான வேகப்பந்துவீச்சாளர்களாக ரபாடா, பூம்ரா மற்றும் அப்பாஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

ககிசோ ரபாடா:

தென் ஆப்பிரிக்காவின் முக்கியப் பந்துவீச்சாளரான ரபாடா கடந்த ஆண்டு 20 இன்னிங்ஸில் 52 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அவருடைய பந்துவீச்சு சராசரி 20.07 ஆகும். அவர் ஒவ்வொரு 38.2 பந்துகளுக்கு ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார். குறிப்பாக ஒரு போட்டியில் நன்றாக பந்துவீசி மற்றொரு போட்டியில் விக்கெட் வீழ்த்தாமல் இருக்கும் பந்துவீச்சாளராக இல்லாமல் 8 முறை 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இரண்டு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார். அதனால், இவர் பிரதான முதல் வேகப்பந்துவீச்சாளராக இடம்பெற்றுள்ளார். 

ஜஸ்பிரீத் பூம்ரா:
   
பூம்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு தான் அறிமுக ஆகி இருந்தாலும், மிகச் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். இவர் 18 இன்னிங்ஸில், 21.02 சராசரியுடன் 48 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 3 முறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார். இவரும் ரபாடாவை போல் கன்ஸிஸ்டன்ஸியை வெளிப்படுத்தும் வகையில் 8 முறை 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஆண்டிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர் என்ற திலீப் தோஷியின் 39 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். இவர், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என 3 நாடுகளிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அதனால், இவர் 2-ஆவது பந்துவீச்சாளராக தேர்வாகியுள்ளார். 

முகமது அப்பாஸ்:

பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது அப்பாஸ், கடந்த ஆண்டில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டில் அவருடைய புள்ளி விவரம் வியக்கத்தக்க வகையில் உள்ளது. 13 இன்னிங்ஸில் பந்துவீசி மொத்தம் 38 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பந்துவீச்சு சராசரி 13.76. ஒவ்வொரு 36.3 பந்துகளுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். 

மொத்தம் விளையாடிய 13 இன்னிங்ஸில், 5 விக்கெட்டுகளுக்கு மேல் 3 முறையும், 4 விக்கெட்டுகளுக்கு மேல் 4 முறையும் வீழ்த்தியுள்ளார். அதனால், இவர் முக்கியப் பந்துவீச்சாளராக தேர்வாகியுள்ளார்.

அணி விவரம்: 

டாம் லாதம்

குசால் மெண்டிஸ் 

கேன் வில்லியம்ஸன் (கேப்டன்)

விராட் கோலி

ஏபி டி வில்லியர்ஸ்

ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்)

ஜேசன் ஹோல்டர்

ரவிச்சந்திரன் அஸ்வின்

ககிசோ ரபாடா

ஜஸ்பிரீத் பூம்ரா

முகமது அப்பாஸ்

தினமணி இணையதளம் இதுபோன்ற ஒரு போட்டியை முதன்முதலாக நடத்தியுள்ளது. இதற்கு வாசகர்கள் நீங்கள் அளித்த ஆதரவு மகிழ்ச்சியளிக்கிறது.

போட்டியில் பங்கேற்ற வாசகர்களின் பெயர்:

அருண்ராஜ் சி

ரவி யுவி 

கார்த்திக் எஸ்

சுதர்சனம் என் 

ராஜேஷ் எம்எஸ்கே

ராஜேந்தர் துரைராஜ்

எடிசன் ஷ்யாம்

கார்த்தி வெங்கடேசன்

ஆனந்த் முருகன்

பென்னி டேவிட்

அருண் குமார்

சிவா ஜேபி

பாலா அருணா

சுகுமார் குமார்

கிருஷ்ணா முகிலன்

கௌத் சூர்யா

விக்கி ஷான்

கலை செல்வம்

யுவி கிரிஷ்

முத்துகுமார் டிடிஎல்

பாஸ்கர் எஸ்

தேவ பாரதி

அரவிந்த் ஷங்கர்

கமல் ராஜ்

ஹஜா கமல்

வினோத் எஸ்

ரஞ்சித் சி லிவின்

கார்த்திக் ராஜா

ரஞ்சித் செல்வராஜ்

சத்தியராஜ் ராமச்சந்திரன்

அசோக் குமார்

சூரியகுமார்

பிரபு

வெற்றிவேல்

விவேக்

அழகர் ராஜா

பிரவீன் குமார்

சத்தியமூர்த்தி

ஜெய்சீலன்

பொன்னரசன் குரு

கார்த்திகேயன்

ரஞ்சித் பிரதீக்

சரவண குமார்

தீபக் குமார்

சிவகார்த்தி

ஸ்மார்ட் சீனி

விஜய்

சந்தோஷ் 

மாரி ஈஸ்வர்

பிரவீன் குமார்

தீபக் குமார் 

முத்துமாரி

சுரேஷ் பழனிசாமி


இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற வாசகர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com