உலக ஹாக்கி அரையிறுதி: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன.
2018-இல் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் தகுதிச்சுற்றான உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 15 முதல் 25 வரை லண்டனில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் உலகின் தலைசிறந்த 10 அணிகள் பங்கேற்கின்றன.
இந்தியா, பாகிஸ்தான், போட்டியை நடத்தும் இங்கிலாந்து, ஒலிம்பிக் சாம்பியனான ஆர்ஜென்டீனா, நடப்பு ஐரோப்பிய சாம்பியனான நெதர்லாந்து, தென் கொரியா ஆகிய 6 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுவிட்டன. எஞ்சிய 4 அணிகள் வரும் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் நடைபெறவுள்ள தகுதிச்சுற்றின் மூலம் பிரதான சுற்றில் விளையாடும் வாய்ப்பைப் பெறும்.
உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டிக்கான அட்டவணை சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி இந்தியாவும், பாகிஸ்தானும் "பி' பிரிவில் இடம்பெற்றுள்ளன. இதில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டம் ஜூன் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவிடம் தோல்வி கண்ட பாகிஸ்தான், அதற்கு பதிலடி கொடுக்க இந்தப் போட்டியில் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. "பி' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் தவிர நெதர்லாந்து அணியும் இடம்பெற்றுள்ளது. "ஏ' பிரிவில் தென் கொரியா, ஆர்ஜென்டீனா, இங்கிலாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com