ஐஎஸ்எல்: மும்பை அணிக்கு முதலிடம்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் மும்பை சிட்டி-டெல்லி டைனமோஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது. இதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் 23 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது மும்பை.
ஐஎஸ்எல்: மும்பை அணிக்கு முதலிடம்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் மும்பை சிட்டி-டெல்லி டைனமோஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது. இதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் 23 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது மும்பை.
மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மோதிய இவ்விரு அணிகளும், ஏற்கெனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்டதால் நெருக்கடியின்றி விளையாடின. மும்பை அணியின் நட்சத்திர வீரர் சுநீல் சேத்ரிக்கு இந்த ஆட்டத்தில் ஓய்வளிக்கப்பட்டது.
ஆட்டத்தின் முதல் 20 நிமிடங்கள் எவ்வித விறுவிறுப்பும் இன்றி இருந்தது. 22-ஆவது நிமிடத்தில் கஃபு, மும்பை அணியின் நட்சத்திர வீரரான டீகோ போர்லானுக்கு மிக அழகாக பந்தை கிராஸ் செய்தார். அவர் உடனடியாக கோல் கம்பத்தை நோக்கி பந்தை வேகமாக உதைக்க, அதை டெல்லி கோல் கீப்பர் டோப்லாஸ் அசத்தலாக முறியடித்தார்.
36-ஆவது நிமிடத்தில் மும்பையின் வெடாக்ஸ் கோலடிக்க முயன்றார். ஆனால் பந்து கோல் கம்பத்துக்கு மேலே பறந்ததால் அவருடைய முயற்சி வீணானது. இதன்பிறகு 39-ஆவது நிமிடத்தில் டெல்லி வீரர் பெலிசாரி ப்ரீ கிக் மூலம் கோலடிக்க முயன்றார். ஆனால் அவர் உதைத்த பந்து கோல் கம்பத்துக்கு மேலே பறந்ததால் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் பெலிசாரி, போர்லான் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த கோல் வாய்ப்பை கோட்டைவிட, ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.
இந்த சீசனில் 14 ஆட்டங்களில் விளையாடிய மும்பை அணி 6 வெற்றி, 5 டிரா, 3 தோல்விகளுடன் 23 புள்ளிகளைப் பெற்றது. டெல்லி அணி 14 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 6 டிரா, 3 தோல்விகளுடன் 21 புள்ளிகளைப் பெற்று 2-ஆவது இடத்தில் உள்ளது. கேரளம்-நார்த் ஈஸ்ட் அணிகள் இடையிலான ஆட்டத்தின் முடிவைப் பொறுத்து டெல்லியின் இடம் புள்ளிகள் பட்டியலில் மாறுபடலாம்.

புள்ளிகள் பட்டியல்

அணி
மும்பை 14 6 5 3 23
டெல்லி 14 5 6 3 21
கொல்கத்தா 14 4 8 2 20
கேரளம் 13 5 4 4 19
நார்த் ஈஸ்ட் 13 5 3 5 18
புணே 14 4 4 6 16
சென்னை 14 3 6 5 15
கோவா 14 4 2 8 14

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com