சேவாக்கின் ஆட்டம் சச்சினுக்கு விருந்து

சேவாக்குடன் இணைந்து விளையாடியபோது அவர் ஆடிய ஆட்டம் எனக்கு விருந்தாக அமைந்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.
சேவாக்கின் ஆட்டம் சச்சினுக்கு விருந்து

சேவாக்குடன் இணைந்து விளையாடியபோது அவர் ஆடிய ஆட்டம் எனக்கு விருந்தாக அமைந்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.
இது தொடர்பாக சச்சின் மேலும் கூறியதாவது: சேவாக் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து ரசித்திருக்கிறேன். அவருடைய ஆட்டம் எனக்கு விருந்தாக அமைந்தது. ஏனெனில் அவர் அடுத்தடுத்து என்ன மாதிரியான ஷாட்டை ஆடுவார் என்பதை கணிப்பது கடினம். அவருடன் இணைந்து விளையாடியபோது அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாது. சில காலம் அவருடன் இணைந்து விளையாடிய பிறகே அவர் என்ன நினைக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.
முன்னாள் தென் ஆப்பிரிக்க கேப்டன் ஹன்ஸி குரோனியேவின் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு நான் அஞ்சியிருக்கிறேன். அவருடைய பந்துவீச்சை பற்றி விவரிப்பது கடினம். அவர் பலமுறை என்னை ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார். மேற்கிந்தியத் தீவுகளின் பிரையன் லாரா சிறப்புமிக்க வீரர். கிரிக்கெட்டுக்கு வெளியே எனக்கு பிடித்த விளையாட்டு வீரர் ரோஜர் ஃபெடரர். நான் எதிர்கொண்ட பந்துவீச்சாளர்களில் ஷோயிப் அக்தரும், பிரெட் லீயும்தான் அதிவேகப் பந்துவீச்சாளர்கள் என்றார்.
சச்சினும், சேவாக்கும் ஏராளமான போட்டிகளில் தொடக்க வீரர்களாக களமிறங்கி இந்திய ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com