பயிற்சியாளர் பெக்கரை பிரிந்தார் ஜோகோவிச்

உலகின் 2-ஆம் நிலை டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தனது பயிற்சியாளர் போரிஸ் பெக்கரை பிரிந்தார்.
பயிற்சியாளர் பெக்கரை பிரிந்தார் ஜோகோவிச்

உலகின் 2-ஆம் நிலை டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தனது பயிற்சியாளர் போரிஸ் பெக்கரை பிரிந்தார்.
போரிஸ் பயிற்சியின் கீழ், 3 சீசன்களில் விளையாடியுள்ள ஜோகோவிச் 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
இதுகுறித்து ஜோகோவிச் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளதாவது:
நானும், போரிஸ் பெக்கரும் இணைந்து பணியாற்றத் தொடங்கியபோது சில இலக்குகளை திட்டமிட்டிருந்தோம். அதை தற்போது எட்டிவிட்ட நிலையில் எனக்கும், போரிஸ் பெக்கருக்கும் இடையேயான ஒத்துழைப்பை முடித்துக் கொள்வதென இருவரும் இணைந்து முடிவு செய்துள்ளோம்.
என்னுடன் பணியாற்றியபோது போரிஸ் அளித்த ஒத்துழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேவேளையில், ஒரு நல்ல டென்னிஸ் விளையாட்டை அப்படியே தொடருவதும், அடுத்த சீசனுக்கான புதிய இலக்குகளையும் நிர்ணயிப்பதும் தான் எனது தற்போதைய திட்டம். அதுதொடர்பாக எனது எதிர்கால முடிவுகளை மேற்கொள்வேன் என்று ஜோகோவிச் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
போரிஸ் பெக்கருடன் பணியாற்றியபோது, ஆடவர் ஒற்றையர் பிரிவில் 12 பட்டங்களையும், ஃபெடரரை வீழ்த்தி 17 பட்டங்களையும், பீட் சம்ப்ராஸ் மற்றும் நடாலை தோற்கடித்து 14 பட்டங்களையும் ஜோகோவிச் கைப்பற்றியுள்ளார்.
போரிஸுடன் பணியாற்றுவது குறித்து ரோலண்ட் கேரோஸ் போட்டியின்போது, ஜோகோவிச்சிடம் கேட்டபோது, "கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பான தருணங்களை போரிஸுடன் கொண்டுள்ளேன். டூர் போட்டிகளையும், அவற்றின் களத்திலும், களத்திற்கு வெளியிலும் சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பதை உளவியல் ரீதியாக போரிஸ் கற்றுத் தந்துள்ளார்.
அவரது பங்களிப்பு மிகப் பெரியது. எங்களது ஒத்துழைப்பு எதுவரை நீடிக்கும் எனத் தெரியவில்லை. அதை ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் முடிவு செய்கிறோம்' என்று கூறியிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com