உலக ஜூனியர் ஹாக்கி: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

உலக ஜூனியர் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் கனடாவை 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
உலக ஜூனியர் ஹாக்கி: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

உலக ஜூனியர் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் கனடாவை 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
லக்னெளவில் உள்ள மேஜர் தயான்சந்த் செயற்கை இழை ஆடுகளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டம், பனிப்பொழிவு காரணமாக 15 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது.
இந்த ஆட்டத்தின் 35-ஆவது நிமிடத்தில் இந்தியாவுக்கான முதல் கோல் வாய்ப்பு கிடைத்தது. மன்தீப் சிங்கால் அந்த கோல் அடிக்கப்பட்டது. கனடா அணியின் தடுப்பாட்டத்தை தொடர்ந்து தகர்த்தாடிய இந்தியா, ஆட்டத்தின் 46-ஆவது நிமிடத்தில் 2-ஆவது கோல் வாய்ப்பை எட்டியது.
பின்னர் நடைபெற்ற ஆட்டத்தில் வருண் குமார் 60-ஆவது நிமிடத்திலும், அஜித் பாண்டே 66-ஆவது நிமிடத்திலும் என அடுத்தடுத்து கோல் அடித்தனர். இந்தியாவின் கோல் மழையில் மூழ்கிய கனடா, மீண்டு வருவதற்கோ, கோல் அடிப்பதற்கோ வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதி வரையில் அதே நிலை தொடர்ந்ததால், இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
கனடா அணியில் 13 பேர் இந்திய வம்சாவளி வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் வரும் சனிக்கிழமை இங்கிலாந்தை சந்திக்க உள்ளது.
முன்னதாக, "சி' பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தென் ஆப்பிரிக்காவை 4-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வீழ்த்தியது.
நேரம் மாற்றம்: இதனிடையே, லக்னெளவில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதன் காரணமாக ஆட்டங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புதிய அட்டவணையின்படி வெள்ளிக்கிழமை முதல், ஒருநாளின் இறுதி ஆட்டம் மாலை 6 மணிக்கு தொடங்கும். முன்னதாக இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.
அட்டவணையை ஈடு செய்யும் வகையில், ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டிருந்த 13-ஆம் தேதி 2 குருப் சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com