அதுமட்டும் நடந்திருந்தால்... : தோல்வி குறித்து அங்கலாய்க்கும் தோனி!

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில்
அதுமட்டும் நடந்திருந்தால்... : தோல்வி குறித்து அங்கலாய்க்கும் தோனி!

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் தில்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் முதலில் பந்துவீச தீர்மானித்தது. 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்தது நியூஸிலாந்து அணி. ஆனால், இந்திய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களுக்கு சுருண்டது. நியூஸிலாந்து தரப்பில், செளதி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 118 ரன்கள் அடித்த கேன் வில்லியம்சன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

தோல்வி குறித்து இந்திய கேப்டன் தோனி கூறியதாவது:

இந்தப் போட்டியில் குறைந்த ரன்கள் கொண்ட கூட்டணிகளே அமைந்தது. அடிக்கடி விக்கெட்டுகளை வேறு இழந்துகொண்டிருந்தோம். இதுபோன்ற இலக்கை அடைய முற்படும்போது விக்கெட்டுகள் கைவசம் இருக்கவேண்டும். 41-வது ஓவரில் இரு விக்கெட்டுகளை இழந்துவிட்டோம்.

எந்த ஒரு பேட்ஸ்மேனும் தான் இன்னும் பத்து சதவிகிதம் கூடுதலாகப் பங்களித்திருந்தால் வென்றிருப்போம் எனக் கூறமுடியும். பேட்ஸ்மேன்களின் பொறுப்பு மிகவும் முக்கியம். பெளலர்கள் அருமையாக பந்துவீசினார்கள். நம்முடைய பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவர் இன்னும் கூடுதலாக 15 நிமிடங்கள் பேட்டிங் செய்திருந்தால் நாம் வென்றிருப்போம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com