இந்தியா - இங்கிலாந்து தொடரில் டிஆர்எஸ்: பிசிசிஐ அறிவிப்பு!

இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின்போது... 
இந்தியா - இங்கிலாந்து தொடரில் டிஆர்எஸ்: பிசிசிஐ அறிவிப்பு!

இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின்போது நடுவரின் தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்தும் முறை (டிஆர்எஸ்) பயன்படுத்தப்பட உள்ளதாக பிசிசிஐ தலைவர் அறிவித்துள்ளார். 

ஆரம்பத்தில் டிஆர்எஸ்ஸுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த பிசிசிஐ, இப்போது அதை பயன்படுத்த முன்வந்துள்ளது. இது தொடர்பாக ஐசிசி மேலாளர் (கிரிக்கெட்) ஜெஃப் அலார்டைஸ், டிஆர்எஸ்ஸுக்கு தொழில்நுட்ப உதவி அளிக்கும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் பிசிசிஐ நிர்வாகிகளையும், இந்திய அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவையும் சந்தித்துள்ளார்கள். 
2008-ல் இலங்கையில் நடைபெற்ற இந்தியா - இலங்கை இடையிலான டெஸ்ட் தொடரின்போது டிஆர்எஸ் பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவிக்கவே, இந்திய அணி பங்கேற்ற இரு நாடுகள் இடையிலான தொடர் எதிலும் டிஆர்எஸ் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2011 இங்கிலாந்து தொடரில் எல்பிடபிள்யூ தவிர்த்த இதர முடிவுகளுக்கு டிஆர்எஸ் பயன்படுத்தப்பட்டது. 

இந்தத் தொடரில் டிஆர்எஸ் பயன்படுத்தப்படும் விதத்தைப் பார்த்து பின்வரும் தொடர்களில் டிஆர்எஸ் முறை தொடரப்படும் என பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் கூறியுள்ளார். 

இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர், நவம்பர் 9-ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com