இரண்டாவது ஒரு நாள் போட்டி: நியூஸிலாந்து 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது ஒரு நாள் போட்டி: நியூஸிலாந்து 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் தில்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் முதலில் பந்துவீச தீர்மானித்தது.
நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ட்டின் கப்டில், டாம் லதாம் களமிறங்கினர். இதில் கப்டில் டக் அவுட் ஆனார்.
அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன், லதாமுடன் இணைந்தார். இந்த இணை, அணிக்கான ரன் குவிப்பில் ஈடுபட்டது. இதில் லதாம் 46 பந்துகளுக்கு 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
வில்லியம்சன் நிலைத்து ஆடி சதம் கடந்தார். மொத்தம் 128 பந்துகளை சந்தித்த அவர், 14 பவுண்டரி 1 சிக்ஸர் என 118 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த டெய்லர், ஆண்டர்சன் தலா 21 ரன்கள் அடித்தனர். ரோஞ்சி, டேவ்சிச், செளதி, ஹென்றி ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்தது நியூஸிலாந்து அணி. சேன்ட்னர் 9, போல்ட் 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இந்திய தரப்பில், பூம்ரா, அமித் மிஸ்ரா அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து, 243 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர்கள் ரோஹித் 15, ரஹானே 28 ரன்களில் ஆட்டமிழந்தனர். கோலி 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
மணீஷ் பாண்டே, தோனி அணி சற்று நிலைத்தது. எனினும், பாண்டே 19, தோனி 39 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேதர் ஜாதவ் அதிகபட்சமாக 37 பந்துகளுக்கு தலா 2 பவுண்டரி மற்றும் சிக்ஸருடன் 41 ரன்கள் எடுத்தார். உமேஷ் யாதவ் 18 ரன்கள் அடித்தார்.
அக்ஸர் படேல் (17), ஹர்திக் பாண்டியா (36), மிஸ்ரா (1), பூம்ரா (0) என விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தது. இதனால் இந்திய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களுக்கு சுருண்டது.
நியூஸிலாந்து தரப்பில், செளதி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 118 ரன்கள் அடித்த கேன் வில்லியம்சன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.


ஸ்கோர் போர்டு

மார்ட்டின் கப்டில் பி யாதவ் 0 2
டாம் லதாம் எல்பிடபிள்யு பி ஜாதவ் 46 46
வில்லியம்சன் சி ரஹானே பி மிஸ்ரா 118 128
ராஸ் டெய்லர் சி சர்மா பி மிஸ்ரா 21 42
ஆண்டர்சன் எல்பிடபிள்யு பி மிஸ்ரா 21 32
லுக் ரோஞ்சி சி தோனி பி படேல் 6 10
சேன்ட்னர் நாட் அவுட் 9 16
டேவ்சிச் சி படேல் பி பூம்ரா 7 6
டிம் செளதி பி பூம்ரா 0 2
மாட் ஹென்றி பி பூம்ரா 6 12
டிரென்ட் போல்ட் நாட் அவுட் 5 4

மொத்தம் (50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு) 242


விக்கெட் வீழ்ச்சி: 1-0 (கப்டில்), 2-120 (லதாம்), 3-158 (டெய்லர்), 4-204 (ஆண்டர்சன்), 5-213 (வில்லியம்சன்), 6-216 (ரோஞ்சி), 7-224 (டேவ்சிச்), 8-225 (செளதி), 9-237 (ஹென்றி)


பந்துவீச்சு: உமேஷ் யாதவ் 9} 0} 42} 1, பாண்டியா 9}0}45}0, பூம்ரா 10}0}35}3, அக்ஸர் படேல் 10}0}49}1, அமித் மிஸ்ரா 10}0}60}3, கேதர் ஜாதவ் 2}0}11}1.

இந்தியா

விக்கெட் வீழ்ச்சி: 1-0 (கப்டில்), 2-120 (லதாம்),
3-158 (டெய்லர்), 4-204 (ஆண்டர்சன்), 5-213 (வில்லியம்சன்), 6-216 (ரோஞ்சி), 7-224 (டேவ்சிச்), 8-225 (செளதி),
9-237 (ஹென்றி)ரோஹித் சி ரோஞ்சி பி போல்ட் 15 27
ரஹானே சி ஆண்டர்சன் பி செளதி 28 49
கோலி சி ரோஞ்சி பி சேன்ட்னர் 9 13
மணீஷ் ரன் அவுட் (சேன்ட்னர்/ரோஞ்சி) 19 25
தோனி சி & பி செளதி 39 65
ஜாதவ் சி ரோஞ்சி பி ஹென்றி 41 37
படேல் சி சேன்ட்னர் பி கப்டில் 17 22
பாண்டியா சி சேன்ட்னர் பி போல்ட் 36 32
மிஸ்ரா சி பிரேஸ்வெல் (பதிலி வீரர்) பி கப்டில் 1 3
உமேஷ் நாட் அவுட் 18 23
பூம்ரா பி செளதி 0 1

மொத்தம் (49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு) 236

விக்கெட் வீழ்ச்சி: 1-21 (ரோஹித்), 2-40 (கோலி),
3-72 (ரஹானே), 4-73 (மணீஷ்), 5-139 (ஜாதவ்),
6-172 (தோனி), 7-180 (படேல்), 8-183 (மிஸ்ரா),
9-232 (பாண்டியா), 10-236 (பூம்ரா)
பந்துவீச்சு: மாட் ஹென்றி 10}0}51} 1, போல்ட் 10}2}25} 2,
செளதி 9.3} 0} 52}3, டேவ்சிச் 9} 0} 48 }0, சேன்ட்னர் 10}0}49}1, கப்டில் 1}0}6}2,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com