உலகக் கோப்பை கபடி அரையிறுதி: இந்தியாவை வீழ்த்துமா தாய்லாந்து?

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
உலகக் கோப்பை கபடி அரையிறுதி: இந்தியாவை வீழ்த்துமா தாய்லாந்து?

உலகக் கோப்பை கபடி போட்டியில் ஆச்சரியம் ஏற்படுத்தியுள்ள அணிகளில் ஒன்று தாய்லாந்து (மற்றொன்று கென்யா). அந்த அணி, இன்று இந்தியாவை அரையிறுதியில் சந்திக்கிறது. இதனால், தாய்லாந்து நடப்பு சாம்பியன் இந்தியாவை வீழ்த்தி அதிர்ச்சி ஏற்படுத்துமா என்கிற ஆவல் ஏற்பட்டுள்ளது. 

உலகக் கோப்பை கபடிப் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாதில் நடைபெற்று வருகிறது. 32 நாடுகளில் கபடி விளையாடப்பட்டு வருகிறது. அதிலிருந்து இந்தியா, தென் கொரியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, போலந்து, தாய்லாந்து, வங்கதேசம், ஜப்பான், ஆர்ஜென்டீனா, கென்யா ஆகிய 12 நாடுகள் உலகக் கோப்பை போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளன. இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றம் காரணமாக பாகிஸ்தான் அணி பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனது கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது நடப்பு சாம்பியனான இந்தியா. இதில் 69-18 என எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இங்கிலாந்து அணி நான்காம் இடத்தைப் பிடித்தது. 

போட்டியில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

இன்று நடைபெறும் அரையிறுதிப் போட்டிகளில் இந்தியா - தாய்லாந்து, ஈரான் - தென் கொரியா அணிகள் மோதுகின்றன. இறுதி ஆட்டம் 22-ஆம் தேதி நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com