உலகக் கோப்பை கபடி: இறுதிச்சுற்றில் இந்தியா - ஈரான் மோதல்

இன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் இந்தியாவும் ஈரானும் மோதுகின்றன.
உலகக் கோப்பை கபடி: இறுதிச்சுற்றில் இந்தியா - ஈரான் மோதல்

உலகக் கோப்பை கபடிப் போட்டியில் இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து இன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் இந்தியாவும் ஈரானும் மோதுகின்றன.

உலகக் கோப்பை கபடிப் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாதில் நடைபெற்று வருகிறது. 32 நாடுகளில் கபடி விளையாடப்பட்டு வருகிறது. அதிலிருந்து இந்தியா, தென் கொரியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, போலந்து, தாய்லாந்து, வங்கதேசம், ஜப்பான், ஆர்ஜென்டீனா, கென்யா ஆகிய 12 நாடுகள் உலகக் கோப்பை போட்டியில் விளையாட தகுதி பெற்றன. இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றம் காரணமாக பாகிஸ்தான் அணி பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

போட்டியில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. 

வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் இந்தியா 73-20 என்ற புள்ளிகள் கணக்கில் தாய்லாந்தைத் தோற்கடித்தது. மற்றொரு அரையிறுதியில் ஈரான் அணி 28-22 என்ற புள்ளிகள் கணக்கில் தென் கொரியாவைத் தோற்கடித்தது. 

இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், ஈரானும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com