ஐஎஸ்எல்: கொல்கத்தாவுக்கு 2-ஆவது வெற்றி

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 20-ஆவது லீக் ஆட்டத்தில் அட்லெடிகொ டி கொல்கத்தா அணி 1-0 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோஸ் அணியைத் தோற்கடித்தது.
கோலடித்த மகிழ்ச்சியில் கொல்கத்தாவின் இயான் ஹியூம் (இடது).
கோலடித்த மகிழ்ச்சியில் கொல்கத்தாவின் இயான் ஹியூம் (இடது).

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 20-ஆவது லீக் ஆட்டத்தில் அட்லெடிகொ டி கொல்கத்தா அணி 1-0 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோஸ் அணியைத் தோற்கடித்தது.
கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுமே கோலடிக்கவில்லை. பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாட, ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது.
75-ஆவது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ஹென்ரிக் செரீனோ, டெல்லி வீரர் ரிச்சர்ட் காட்úஸவை கீழே தள்ள, 2-ஆவது முறையாக மஞ்சள் அட்டையால் எச்சரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதையடுத்து டெல்லி அணிக்கு நடுவர் பெனால்டி வாய்ப்பை வழங்கினார். ஆனால் அதை டெல்லி வீரர் மார்செலீன்ஹோ கோல் கம்பத்துக்கு மேலே அடித்து வீணடித்தார். இதனால் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட கொல்கத்தாவுக்கு, 78-ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதில் இயான் ஹியூம் கோலடித்தார். அதுவே கொல்கத்தாவின் வெற்றி கோலாகவும் அமைந்தது.
இதன்மூலம் 2-ஆவது வெற்றியைப் பெற்றுள்ள கொல்கத்தா அணி 9 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள கொல்கத்தா ஓர் ஆட்டத்தில்கூட தோற்கவில்லை. இரு வெற்றிகளையும், 3 டிராவையும் சந்தித்துள்ளது. அதேநேரத்தில் டெல்லி அணி இந்த சீசனில் முதல் தோல்வியை சந்தித்துள்ளது. முன்னதாக 4 ஆட்டங்களில் விளையாடியிருந்த அந்த அணி ஒரு வெற்றியையும், 3 டிராவையும் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டம்

புணே-சென்னை,
இடம்: புணே, நேரம்: இரவு 7
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com