விளையாட்டுப் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்

பள்ளிகளில் விளையாட்டுப் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் வலியுறுத்தினார்.
விளையாட்டுப் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்

பள்ளிகளில் விளையாட்டுப் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் வலியுறுத்தினார்.
மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் (சிஏபிஇ) 64-ஆவது கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அமைச்சர் விஜய் கோயல் பேசியதாவது:
கல்வி பயிலும் மாணவர்களிடையே விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அது தொடர்பான பாடத்தையும் அவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். விளையாட்டில் ஆர்வம் காட்டும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கவும் நடவடிக்கை எடுக்கலாம்.
நாட்டில் அதிகரித்து வரும் நீரிழிவு, பரவும் தொற்றுகள் அல்லாத நோய்கள் போன்றவற்றில் இருந்து இளைய தலைமுறையைப் பாதுகாக்க விளையாட்டு அவசியமாகும். எனவே, காலம் தாழ்த்தாமல் கல்வி நிறுவனங்களில் விளையாட்டுப் பாடத்தை கட்டாயமாக்கி, அதை ஆர்வத்துடன் மாணவர்கள் கற்பதை ஊக்கவிக்க வேண்டும்.
அனைத்துக் கல்வி நிறுவனங்களும் விளையாட்டுக்கான மைதானங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். அத்தகைய வசதிகள் இல்லாத நிறுவனங்கள், அருகே உள்ள கல்வி நிறுவனங்களின் வசதிகளைப் பயன்படுத்த ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சி ஆசிரியர் அனைத்துப் பள்ளிகளிலும் நியமிக்கப்பட வேண்டும். விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கை வழங்கவும், விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு வருகைப் பதிவு, தேர்வுகள் ஆகியவற்றில் நிபந்தனையுடன் கூடிய விலக்கு அளிக்கலாம் என்றார் விஜய் கோயல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com