பிரெஞ்சு ஓபன்: 2-ஆவது சுற்றில் சிந்து

பிரெஞ்சு ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
பிரெஞ்சு ஓபன்: 2-ஆவது சுற்றில் சிந்து

பிரெஞ்சு ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சிந்து தனது முதல் சுற்றில் 21-9, 29-27 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் இப் புய் இன்னை தோற்கடித்தார்.
ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் எச்.எஸ்.பிரணாய் 21-16, 21-18 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் பூன்சாக் பொன்சனாவை தோற்கடித்தார். அடுத்த சுற்றில் சீன தைபேவின் செள டியென் சென்னை எதிர்கொள்கிறார் பிரணாய். அதேநேரத்தில் மற்றொரு ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் அஜய் ஜெயராம் 22-20, 10-21, 18-21 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் அந்தோணி சினிசுகா ஜின்டிங்கிடம் தோல்வியடைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com