ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா-தென் கொரியா மோதல்

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தனது அரையிறுதியில் தென் கொரியாவை சந்திக்கிறது.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தனது அரையிறுதியில் தென் கொரியாவை சந்திக்கிறது.
மற்றொரு அரையிறுதியில் மலேசியாவும், நடப்பு சாம்பியன் பாகிஸ்தானும் மோதுகின்றன. இரு அரையிறுதி ஆட்டங்களும் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.
மலேசியாவின் குவான்டன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இந்திய அணி 4 வெற்றி, ஒரு டிராவைப் பதிவு செய்ததன் மூலம் 13 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது.
இந்த நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் 4-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது. மலேசியா-தென் கொரியா இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதையடுத்து மலேசியா 10 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தையும், பாகிஸ்தான் 9 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தையும், தென் கொரியா 8 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தையும் பிடித்தன. அதன்படி முதல் அரையிறுதியில் இந்தியாவும், தென் கொரியாவும், 2-ஆவது அரையிறுதியில் பாகிஸ்தானும், மலேசியாவும் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com