ஜூனியர் ஹாக்கி இந்தியா தோல்வி

நான்கு நாடுகள் பங்கேற்றுள்ள ஜூனியர் ஆடவர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 2-4 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டது.

நான்கு நாடுகள் பங்கேற்றுள்ள ஜூனியர் ஆடவர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 2-4 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டது.
ஸ்பெயினின் வேலன்சியா நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே பெனால்டி கார்னர் வாய்ப்பின் மூலம் கோலடித்தது பெல்ஜியம்.
4-ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் கோலடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்ட இந்தியா, 11-ஆவது நிமிடத்தில் ஸ்கோரை சமன் செய்தது. இதன்பிறகு இரு அணிகளுக்கும் பெனால்டி வாய்ப்பு கிடைத்தபோதிலும், கோலடிக்கவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 49, 56, 57-ஆவது நிமிடங்களில் பெல்ஜியம் கோலடிக்க, அந்த அணி 4-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு போராடிய இந்திய அணி 60-ஆவது நிமிடத்தில் கோலடித்தபோதிலும், தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com