டபிள்யூ.டி.ஏ. பைனல்ஸ்: அரையிறுதியில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி!

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் டபிள்யூ.டி.ஏ. பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் இரட்டையர் பிரிவு அரையிறுதி போட்டியில் விளையாட இந்தியாவின் சானியா மிர்ஸா மற்றும் சுவிஸ்ஸின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி... 
டபிள்யூ.டி.ஏ. பைனல்ஸ்: அரையிறுதியில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெற்று வரும் டபிள்யூ.டி.ஏ. பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் இரட்டையர் பிரிவு அரையிறுதி போட்டியில் விளையாட இந்தியாவின் சானியா மிர்ஸா மற்றும் சுவிஸ்ஸின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி தகுதி பெற்றுள்ளது.

தரவரிசையில் முன்னணியில் இருக்கும் வீராங்கனைகளுக்கான இறுதிச்சுற்று (டபிள்யூ.டி.ஏ. பைனல்ஸ்) டென்னிஸ் தொடர் சிங்கப்பூரில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான இரட்டையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சானியா மிர்சா - சுவி்ட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி சீன தைபே சகோதரிகளான யங்-ஜான் சான் - ஹயோ-சிங் சாங் ஜோடியை எதிர்த்து விளையாடியது.

இதில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி 7-6, 7-5 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்றது. இதன்முலம் சானியா - ஹிங்கிஸ் ஜோடி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாததிற்கு பிறகு சேர்ந்து விளையாடாமல் இருந்த சானியா - ஹிங்கிஸ் ஜோடி, இந்த தொடரில்தான் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com