தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் நினைத்ததை சாதிக்கலாம்: தீபாமாலிக்

தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இருந்தால் மாணவ, மாணவிகள் நினைத்ததைச் சாதிக்கலாம் என பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இந்திய குண்டு எறிதல் வீராங்கனை தீபா மாலிக் தெரிவித்தார்.
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு (உயரம் தாண்டுதல்) காரையும், வெள்ளி வென்ற தேவேந்திர ஜஜாரியா (ஈட்டி எறிதல்), தீபா மாலிக் (குண்டு எறிதல்), வெண்கலம் வருண்சிங் (உயரம் தாண்டுதல்) ஆகியோருக்கு

பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்களுக்கு சென்னை ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் சார்பில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு பள்ளியின் தாளாளர் எம்.ஜி.எம்.வேல்மோகன் தலைமை வகித்தார்.
பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப் பத்தகம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு காரும், ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியா, குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தீபா மாலிக், உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வருண்சிங் ஆகியோரைப் பாராட்டி வீரவாள் மற்றும் தலா ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்கக் காசுகளையும் வேல்மோகன் வழங்கினார்.
பின்னர் தீபா மாலிக் பேசுகையில், "சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையல்ல. மாணவ, மாணவிகளுக்கு முதலில் நாம் என்னவாக விரும்புகிறோம் என்கிற லட்சியம் வேண்டும். பின்னர் அதை அடைய தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் உழைத்தால் நினைத்ததைச் சாதிக்கலாம்.
மாணவர்களே நீங்கள் படிக்கவும் வேண்டும். அதுதவிர உங்களுக்கு எதில் ஆர்வம் உள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப பயிற்சி பெறவும் வேண்டும். விளையாட்டில் ஆர்வம் இருப்பின் பயிற்சியாளர்களிடம் தொடர்ந்து பயிற்சி பெற்றால் போட்டியில் வெற்றி பெற முடியும்' என்றார்.
பின்னர் விளையாட்டில் சிறந்து விளங்குவது தொடர்பாக மாணவ, மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு பாரா ஒலிம்பிக் சாம்பியன்கள் பதிலளித்தனர். அதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் ஓவியக் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். பின்னர் அங்குள்ள மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடியதோடு, மத்தாப்பு கொளுத்தி தீபாவளியும் கொண்டாடினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com