ஐஎஸ்எல் கால்பந்து கொல்கத்தாவுக்கு 3-ஆவது வெற்றி

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 26-ஆவது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியைத் தோற்கடித்தது.
ஐஎஸ்எல் கால்பந்து கொல்கத்தாவுக்கு 3-ஆவது வெற்றி

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 26-ஆவது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியைத் தோற்கடித்தது.
இதன்மூலம் இந்த சீசனில் 3-ஆவது வெற்றியைப் பெற்ற கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. முன்னதாக 3-ஆவது இடத்தில் இருந்தது.
குவாஹாட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 39-ஆவது நிமிடத்தில் ஆல்பாரோ கோலடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் நார்த் ஈஸ்ட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் அபாரமாக ஆடிய கொல்கத்தா அணியில் 63-ஆவது நிமிடத்தில் போஸ்டிகோ கோலடிக்க, ஸ்கோர் சமநிலையை எட்டியது.
இதன்பிறகு உத்வேகம் பெற்ற கொல்கத்தா அணி 83-ஆவது நிமிடத்தில் அடுத்த கோலை அடித்தது. இந்த கோலை பெலன்காúஸா அடித்தார். இறுதியில் கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
நார்த் ஈஸ்ட் அணி தனது சொந்த மண்ணில் தோல்வி கண்டது உள்ளூர் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. அந்த அணி 10 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் உள்ளது.


சென்னை-கேரளம் இன்று மோதல்
 சென்னையில் சனிக்கிழமை நடைபெறும் ஐஎஸ்எல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி. அணியும், கேரள பிளாஸ்டர்ஸ் அணியும் மோதுகின்றன.
புள்ளிகள் பட்டியலில் 4-ஆவது இடத்தில் இருக்கும் சென்னை அணி, இந்த ஆட்டத்தில் வென்று முன்னிலை பெறும் முனைப்பில் களமிறங்குகிறது. கடந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ள கேரள அணி, இந்த ஆட்டத்தில் மிகுந்த நம்பிக்கையோடு சென்னையை எதிர்கொள்கிறது. கேரள அணி புள்ளிகள் பட்டியலில் 5-ஆவது இடத்தில் உள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 4 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை 3 ஆட்டங்களிலும், கேரளம் ஓர் ஆட்டத்திலும் வென்றுள்ளன.

போட்டி நேரம்: இரவு 7, நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com