சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இந்தியா-தென் கொரியா இன்று மோதல்

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் சனிக்கிழமை நடைபெறும் 2-ஆவது அரையிறுதியில் இந்தியாவும், தென் கொரியாவும் மோதுகின்றன.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் சனிக்கிழமை நடைபெறும் 2-ஆவது அரையிறுதியில் இந்தியாவும், தென் கொரியாவும் மோதுகின்றன.
மலேசியாவின் குவான்டன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் குரூப் சுற்றின் முடிவில் இந்திய அணி 13 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. அதேநேரத்தில் குரூப் சுற்றில் 4 ஆட்டங்களில் வென்றபோதும், தென் கொரியாவுடனான ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது இந்தியா. இதனால் இந்தியா-தென் கொரியா இடையிலான அரையிறுதி ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் கேப்டனும், கோல் கீப்பருமான ஸ்ரீஜேஷ் கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். முன்னணி பின்கள வீரரான சுரேந்தர் குமாருக்கு இரு ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவரால் இந்த ஆட்டத்தில் விளையாட முடியாது. இந்த இரு விஷயங்களும் இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளன. எனினும் லீக் சுற்றில் அபாரமாக ஆடியிருக்கும் இந்தியா, தென் கொரியாவை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் அரையிறுதியில் மலேசியாவும், நடப்பு சாம்பியனான பாகிஸ்தானும் மோதுகின்றன.

அரையிறுதி ஆட்டங்கள்
மலேசியா-பாகிஸ்தான்
நேரம்: மாலை 3.45
இந்தியா-தென் கொரியா
நேரம்: மாலை 6
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 4

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com