கான்பூர் டெஸ்ட்: 262 ரன்களில் சுருண்டது நியூஸிலாந்து

கான்பூர் டெஸ்ட்: 262 ரன்களில் சுருண்டது நியூஸிலாந்து

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 95.5 ஓவர்களில் 262 ரன்களுக்கு சுருண்டது.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 95.5 ஓவர்களில் 262 ரன்களுக்கு சுருண்டது.

பின்னர் 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய இந்திய அணி 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 47 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்துள்ளது. இதன்மூலம் 215 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
கான்பூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 97 ஓவர்களில் 318 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக முரளி விஜய் 65, புஜாரா 62, ஜடேஜா 42 ரன்கள் எடுத்தனர்.
நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட், மிட்செல் சேன்ட்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய நியூஸிலாந்து அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 47 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. டாம் லதாம் 56, கேன் வில்லியம்சன் 65 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
அஸ்வின், ஜடேஜா அபாரம்: 3-ஆவது நாளான சனிக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணி மேலும் 7 ரன்கள் சேர்த்த நிலையில் லதாமின் விக்கெட்டை இழந்தது. அவர் 151 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். லதாம்-வில்லியம்சன் ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்தது.
பின்னர் வந்த ராஸ் டெய்லர் ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே ஜடேஜா பந்துவீச்சில் வீழ்ந்தார்.
இதையடுத்து லியூக் ரோஞ்சி களமிறங்க, மறுமுனையில் நங்கூரமாக நின்ற கேப்டன் வில்லியம்சனை போல்டாக்கினார் அஸ்வின். வில்லியம்சன் 137 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் சேர்த்தார்.
இதன்பிறகு ரோஞ்சியுடன் இணைந்தார் மிட்செல் சேன்ட்னர். இந்த ஜோடி 49 ரன்கள் சேர்த்தது. ரோஞ்சி 38 ரன்களிலும், சேன்ட்னர் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்தவர்களில் மார்க் கிரேக் 2 ரன்களிலும், ஐஸ் சோதி, டிரென்ட் போல்ட் ஆகியோர் ரன் ஏதுமின்றியும் வெளியேற, 95.5 ஓவர்களில் 262 ரன்களுக்கு சுருண்டது நியூஸிலாந்து. கடைசி 7 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது நியூஸிலாந்து.
இந்தியத் தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
இந்தியா-159/1: இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 56 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய இந்திய அணியில்
கே.எல்.ராகுல்-முரளி விஜய் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 18.1 ஓவர்களில் 52 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய ராகுல் 50 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து விஜயுடன் இணைந்தார் புஜாரா. இந்த ஜோடி அசத்தலாக ஆட, இந்தியாவின் ஸ்கோர் உயர ஆரம்பித்தது.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய விஜய், தேநீர் இடைவேளைக்குப் பிறகு 106 பந்துகளில் அரை சதம் கண்டார். அவரைத் தொடர்ந்து புஜாரா 80 பந்துகளில் அரை சதம் கண்டார்.
3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 47 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. விஜய் 152 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 64, புஜாரா 80 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்


இந்தியா-318 (விஜய் 65, புஜாரா 62, ஜடேஜா 42*, டிரென்ட் போல்ட் 3வி/67, சேன்ட்னர் 3வி/94).
மார்ட்டின் கப்டில் எல்பிடபிள்யூ (பி) யாதவ் 21 31
டாம் லதாம் எல்பிடபிள்யூ (பி) அஸ்வின் 58 151
கேன் வில்லியம்சன் (பி) அஸ்வின் 75 137
ராஸ் டெய்லர் எல்பிடபிள்யூ (பி) ஜடேஜா 0 2
லியூக் ரோஞ்சி எல்பிடபிள்யூ (பி) ஜடேஜா 38 83
மிட்செல் சேன்ட்னர் (சி) சாஹா (பி) அஸ்வின் 32 107
பி.ஜே.வாட்லிங் (சி) & (பி) அஸ்வின் 21 54
மார்க் கிரேக் எல்பிடபிள்யூ (பி) ஜடேஜா 2 8
ஐஸ் சோதி எல்பிடபிள்யூ (பி) ஜடேஜா 0 1
டிரென்ட் போல்ட் (சி) ரோஹித் (பி) ஜடேஜா 0 3
நீல் வாக்னர் நாட் அவுட் 0 0


விக்கெட் வீழ்ச்சி: 1-35 (கப்டில்), 2-159 (லதாம்), 3-160 (டெய்லர்), 4-170 (வில்லியம்சன்),5-219 (ரோஞ்சி), 6-255 (சேன்ட்னர்), 7-258 (கிரேக்), 8-258 (சோதி), 9-258 (போல்ட்), 10-262 (வாட்லிங்).

பந்துவீச்சு: முகமது சமி 11-1-35-0, உமேஷ் 15-5-33-1,  ரவீந்திர ஜடேஜா 34-7-73-5, அஸ்வின் 30.5-7-93-4,  முரளி விஜய் 4-0-10-0, ரோஹித் சர்மா 1-0-5-0.

2-ஆவது இன்னிங்ஸ்


இந்தியா
கே.எல்.ராகுல் (சி) டெய்லர் (பி) சோதி 38 50
முரளி விஜய் நாட் அவுட் 64 152
புஜாரா நாட் அவுட் 50 80
உதிரிகள் 7

மொத்தம் (47 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு) 159
விக்கெட் வீழ்ச்சி: 1-52 (ராகுல்).
பந்துவீச்சு: டிரென்ட் போல்ட் 5-0-11-0,
மிட்செல் சேன்ட்னர் 13-5-33-0, மார்க் கிரேக் 11-1-48-0,
நீல் வாக்னர் 8-3-17-0, ஐஸ் சோதி 7-2-29-1,
மார்ட்டின் கப்டில் 3-0-14-0.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com