தென்னிந்திய விளையாட்டுப் போட்டி: கால்பந்து, ஹாக்கியில் காருண்யா பல்கலை. வெற்றி

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான பல்கலைக்கழகம், கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியில் கால்பந்து, ஹாக்கி போட்டிகளில் காருண்யா பல்கலைக்கழகம் வெற்றி கண்டது.
கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற காருண்யா பல்கலை. அணிக்கு கோப்பையை வழங்குகிறார் கோவை வருமான வரித் துறை ஆணையர் எஸ்.பாலசுப்பிரமணியன்.
கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற காருண்யா பல்கலை. அணிக்கு கோப்பையை வழங்குகிறார் கோவை வருமான வரித் துறை ஆணையர் எஸ்.பாலசுப்பிரமணியன்.

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான பல்கலைக்கழகம், கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியில் கால்பந்து, ஹாக்கி போட்டிகளில் காருண்யா பல்கலைக்கழகம் வெற்றி கண்டது.
காருண்யா பல்கலைக்கழகத்தில் இவாஞ்சலின் நினைவு தென்னிந்திய விளையாட்டுப் போட்டி கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. இதில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் உள்ள 135 கல்லூரி, பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 450 அணிகள் பங்கேற்றன.
இதில், ஆடவர் பிரிவில் கால்பந்து, வாலிபால், கூடைப்பந்து, ஹாக்கி, கபடி போட்டிகளும், மகளிர் பிரிவில் கூடைப்பந்து, கபடி, வாலிபால் போட்டிகளும் நடைபெற்றன.
இறுதிப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. ஆடவர் கால்பந்துப் போட்டியில் கேரள மாநிலம், மஞ்சேரி என்.எஸ்.எஸ். கல்லூரி அணியை வீழ்த்தி காருண்யா பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்தது. கபடி போட்டியில் காருண்யா அணியை வீழ்த்தி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி வென்றது.
கூடைப்பந்து போட்டியில் திருவனந்தபுரம் பேசிலியஸ் பொறியியல் கல்லூரி அணியை வீழ்த்தி திருச்சூர் கேரள வர்மா கல்லூரி அணி வென்றது. ஹாக்கி போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணியை வீழ்த்தி காருண்யா அணியும், வாலிபால் போட்டியில் கோவை என்.ஜி.பி. கலை, அறிவியல் கல்லூரி அணியை வீழ்த்தி கொல்லம் செயின்ட் ஜோசப் அணியும் வெற்றி பெற்றன.
மகளிர் கூடைப்பந்து போட்டியில் கோவை பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி அணியை வீழ்த்தி கள்ளிக்கோட்டை பிராவிடன்ஸ் கல்லூரியும், கபடி போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி அணியை வீழ்த்தி ஆத்தூர் ஏ.வி.எஸ். கல்லூரியும், வாலிபால் போட்டியில் கேரள பிரேன்னன் கல்லூரியை வீழ்த்தி திருச்சூர் செயின்ட் ஜோசப் அணியும் வெற்றி பெற்றன.
பரிசளிப்பு விழாவில், கோவை வருமான வரித் துறை ஆணையர் எஸ்.பாலசுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன், துணைவேந்தர் சேவியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com