தென் ஆப்பிரிக்கா வெற்றி

அயர்லாந்துக்கு எதிரான ஒரேயொரு ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 206 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது தென் ஆப்பிரிக்கா.

அயர்லாந்துக்கு எதிரான ஒரேயொரு ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 206 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது தென் ஆப்பிரிக்கா.
தென் ஆப்பிரிக்காவின் பெனானி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் டி காக்-டெம்பா பெளமா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 24 ஓவர்களில் 159 ரன்கள் குவித்தது. டி காக் 66 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
டெம்பா பெளமா 123 பந்துகளில் 1 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் குவித்து வெளியேறினார். பின்னர் வந்தவர்களில் பெஹார்டியன் 22 பந்துகளில் 50 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். டுமினி ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் (43 பந்துகளில்) சேர்க்க, தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 354 ரன்கள் குவித்தது. அயர்லாந்து தரப்பில் கிரேக் யங் 3 விக்கெட் எடுத்தார்.
பின்னர் ஆடிய அயர்லாந்து அணி, தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 30.5 ஓவர்களில் 148 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கெவின் ஓ"பிரையன் 41, பால் ஸ்டிர்லிங் 40 ரன்கள் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கத் தரப்பில் டுமினி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அறிமுகப் போட்டியில் சதம் கண்ட டெம்பா பெளமா ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com