பி.எஃப்.ஐ. தலைவராக அஜய் சிங் தேர்வு

இந்திய குத்துச்சண்டை சம்மேளன (பி.எஃப்.ஐ.) தலைவராக தொழிலதிபர் அஜய் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய குத்துச்சண்டை சம்மேளன (பி.எஃப்.ஐ.) தலைவராக தொழிலதிபர் அஜய் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பி.எஃப்.ஐ. புதிய நிர்வாகிகள் தேர்தல், சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் பார்வையாளர்கள் மற்றும் மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் கண்காணிப்பில் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் ஜார்க்கண்டைச் சேர்ந்தவரான அஜய் சிங் 49 வாக்குகள் பெற்று வெற்றி கண்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தில்லியைச் சேர்ந்த ரோஹித் ஜைனேந்திர ஜெயின் 15 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
புதிய செயலராக மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஜெய் கெளலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 48 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கோவாவைச் சேர்ந்த லென்னி 12 வாக்குகளும், ஹரியாணாவின் ராகேஷ் டக்ரான் 4 வாக்குகளும் பெற்றனர்.
ஹேமந்த குமார் கலிதா (அஸ்ஸாம்) பொருளாளராகவும், கோய்பி சலாம் சிங் (வட கிழக்கு), ஜான் கார்ஷிங் (கிழக்கு), அனில் குமார் (தென் கிழக்கு), சி.பி.ராஜே (தெற்கு), அமர்ஜித் சிங் (மேற்கு), ராஜேஷ் பண்டாரி (வடக்கு), அனில் குமார் மிஸ்ரா (மத்தி) ஆகியோர் துணைத் தலைவர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்வப்பன் பானர்ஜி (கிழக்கு), ரவி ராஜு (தென் கிழக்கு), ஆர். கோபு (தெற்கு), ராஜேஷ் தேசாய் (மேற்கு), திக்விஜய் சிங் (வடகிழக்கு), சந்தோஷ் குமார் தத்தா (வடக்கு), ராஜீவ் குமார் சிங் (மத்தி) ஆகியோர் பிராந்திய செயலர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com