மணியடித்து டெஸ்ட் போட்டியைத் தொடங்கிவைத்த கபில் தேவ்!

மைதானத்தில் புதிதாகப் பொருத்தப்பட்டுள்ள மணியை அடித்து டெஸ்ட் போட்டியைத் தொடங்கிவைத்தார் கபில் தேவ்.
மணியடித்து டெஸ்ட் போட்டியைத் தொடங்கிவைத்த கபில் தேவ்!

இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடும் 250-ஆவது டெஸ்ட் போட்டி இது.

முதல் டெஸ்ட் போட்டியில் 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட இந்திய அணி, 2-ஆவது போட்டியில் வென்று சர்வதேச தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும் முனைப்பில் உள்ளது.

கடைசியாக 2012-இல் இதே கொல்கத்தா மைதானத்தில் இங்கிலாந்திடம் தோற்ற இந்திய அணி, அதன்பிறகு சொந்த மண்ணில் விளையாடிய 12 போட்டிகளில் ஒன்றில்கூட தோற்கவில்லை. 10 வெற்றிகளையும், 2 டிராவையும் பதிவு செய்துள்ளது.

டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. மைதானத்தில் புதிதாகப் பொருத்தப்பட்டுள்ள மணியை அடித்து டெஸ்ட் போட்டியைத் தொடங்கிவைத்தார் கபில் தேவ். இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள நடைமுறைபோல, ஈடன் கார்டன்ஸிலும் மணியடித்து போட்டி தொடங்கப்பட்டது. இதற்காக ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வெள்ளியால் பூசப்பட்ட பெரிய மணி ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது. அதேபோல டாஸுக்கும் தங்க நாணயம் பயன்படுத்தப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com