ஐ.பி.எல் சீசன் 10: பெங்களூரு  ராயல் சேலஞ்சர்ஸ்க்கு கேப்டனாகிறாரா வாட்சன்?

இன்னும், இரண்டு நாட்களில் துவங்குவிருக்கும் 10-ஆவது சீசன் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் பெங்களூரு  ராயல் சேலஞ்சர்ஸ்க்கு அணிக்கு ...
ஐ.பி.எல் சீசன் 10: பெங்களூரு  ராயல் சேலஞ்சர்ஸ்க்கு கேப்டனாகிறாரா வாட்சன்?

பெங்களூரு: இன்னும், இரண்டு நாட்களில் துவங்குவிருக்கும் 10-ஆவது சீசன் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் பெங்களூரு  ராயல் சேலஞ்சர்ஸ்க்கு அணிக்கு ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல் சீசன் 10 கிரிக்கெட் போட்டித் தொடர் வருகிற 5-ந்தேதி தொடங்குகிறது. இதில் விளையாடவுள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு கேப்டனாக இந்திய அணி கேப்டன் வீராட்கோலி  உள்ளார்.ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் கோலி தோள்பட்டையில் காயம் அடைந்தார். இதன் காரணமாக ஐ.பி.எல்லில் ஆரம்ப கட்ட ஆட்டங்களில் கோலி விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக அந்த அணியில் இடம்பெற்றுள்ள தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் பெங்களூர் அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என்று முதலில் எதிர் பார்க்கப்பட்டது.ஆனால் அவர் தென் ஆப்பிரிக்காவில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் இருந்து முதுகுவலி காரணமாக விலகினார். இதனால் அவரும் தற்பொழுது ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

இந்த சூழ்நிலையில் சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்த ஆஸ்திரேலியாவின்  ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சனை கேப்டனாக  நியமிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்று தெரிகிறது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com