கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வு: ரவி சாஸ்திரி அதிருப்தி!

சம்பள உயர்வு குறித்து ரவி சாஸ்திரி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வு: ரவி சாஸ்திரி அதிருப்தி!

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஆண்டு ஊதியத்தை பிசிசிஐ சமீபத்தில் அதிகரித்தது. ஆனால் இந்தச் சம்பள உயர்வு குறித்து ரவி சாஸ்திரி அதிருப்தி தெரிவித்துள்ளார். 

ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பை, பிசிசிஐ நிர்வாகக் குழு புதன்கிழமை வெளியிட்டது. கோலி, தோனி ஆகியோரின் ஊதியம் ரூ.2 கோடியாக உயர்ந்துள்ளது. ஊதியப் பட்டியலில் சுரேஷ் ரெய்னாவின் பெயர் இடம்பெறவில்லை. இதன்படி, ’ஏ' கிரேடு வீரர்களுக்கான ஊதியம் ரூ.1 கோடியில் இருந்து, ரூ.2 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், ’பி' கிரேடு வீரர்களுக்கான ஊதியம் ரூ.1 கோடியாகவும், ’சி' கிரேடு வீரர்களுக்கான ஊதியம் ரூ.50 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்கான ஊதியம் ரூ.7.50 லட்சத்தில் இருந்து, ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிக்கான ஊதியம் ரூ.6 லட்சமாகவும், டி20 போட்டிக்கான ஊதியம் ரூ.3 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய ஊதியம், 2016 அக்டோபர் 1-ஆம் தேதி முதலாக அமல்படுத்தப்பட்டு வழங்கப்பட உள்ளன. 3 கிரேடுகளில் உள்ள 32 வீரர்களுக்கு இந்த ஊதிய உயர்வு, தேசிய தேர்வுக் குழுவுடனான கலந்தாலோசனைக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ளது. ஏ,பி,சி என எந்த கிரேடு வீரர்கள் பட்டியலிலும் சுரேஷ் ரெய்னாவின் பெயர் இடம்பெறவில்லை. அதேபோல், ஹர்பஜன் சிங் மற்றும் கெளதம் கம்பீர் ஆகியோரது பெயரும் எந்தப் பட்டியலிலும் சேர்க்கப்படவில்லை. 2016 அக்டோபர் 1-ஆம் தேதி முதல் இந்த புதிய ஊதியம் அமலுக்கு வருவதால், அதற்கு முந்தைய போட்டிகளில் விளையாடிய ஹர்பஜன் மற்றும் கம்பீரின் பெயர்கள் இதில் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐயின் இந்த ஊதிய உயர்வை முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி விமரிசனம் செய்துள்ளார். அவர் ஒரு பேட்டியில் கூறியதாவது: இரண்டு கோடி என்பது ஒன்றுமில்லை; இரண்டு கோடி என்பது வேர்க்கடலைக்குச் சமம். டெஸ்ட் வீரர்களின் கிரேடு ஒப்பந்தம் உயர்வானதாக இருக்கவேண்டும். புஜாராவுக்கு உச்சபட்ச மதிப்பு அளிக்கவேண்டும். ஏ கிரேடு ஒப்பந்த வீரர்கள் அதிகச் சம்பளம் பெறவேண்டும். இருமடங்கு உயர்த்தப்பட்டாலும் இன்னும் அதிகமாகக் கொடுத்திருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com