ஐபிஎல்: தொடக்க விழாவில் எமி ஜாக்சன் நடனம்!

ஐபிஎல்: தொடக்க விழாவில் எமி ஜாக்சன் நடனம்!

ஹைதராபாதில் இன்று மாலை 6 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது.

வேகம், விறுவிறுப்பு, பரபரப்பு, அதிரடி, ஆக்ரோஷம், சிக்ஸர் மழை என ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே வரவைக்கும் 10-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஹைதராபாதில் இன்று தொடங்குகிறது.

ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், கடந்த முறை இறுதிச் சுற்றில் விளையாடிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. 47 நாள்கள் நடைபெறும் இந்த ஐபிஎல் தொடரில் 60 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. இறுதி ஆட்டம் மே 21-ஆம் தேதி ஹைதராபாதில் நடைபெறுகிறது. டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத், குஜராத் லயன்ஸ், ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ், மும்பை இண்டியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த முறை போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் சொந்த மைதானங்களிலும் தொடக்க விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 8 அணிகளும் தங்களின் உள்ளூர் மைதானத்தில் முதல் ஆட்டத்தை விளையாடும் தினத்தில் தொடக்க விழா நடைபெறும். ஹைதராபாதில் இன்று மாலை 6 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. இதில் பாலிவுட் நடிகை எமி ஜாக்சன் பங்கேற்று நடனமாடுகிறார். வாணவேடிக்கை, கலைநிகழ்ச்சிகள் என களை கட்ட காத்திருக்கிறது ஹைதராபாத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com