ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை: 4-ஆவது இடத்தில் இந்தியா

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 4-ஆவது இடத்தில் உள்ளது.

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 4-ஆவது இடத்தில் உள்ளது.
கடந்த 2 மாதங்களாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடாதபோதும் இந்திய அணி தரவரிசையில் 4-ஆவது இடத்தை (112 புள்ளிகள்) தக்கவைத்துக் கொண்டது. தென் ஆப்பிரிக்கா 119 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 118 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், நியூஸிலாந்து 113 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும் உள்ளன.
இங்கிலாந்து, இலங்கை, வங்கதேச அணிகள் முறையே 5, 6, 7-ஆவது இடங்களில் உள்ளன. பாகிஸ்தான் 8-ஆவது இடத்திலும், மேற்கிந்தியத் தீவுகள் 9-ஆவது இடத்திலும் உள்ளன. 2019 உலகக் கோப்பை போட்டிக்கு நேரடித் தகுதி பெறுவதற்கு தரவரிசையில் முன்னிலை பெற வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தானும், மேற்கிந்தியத் தீவுகளும் உள்ளன. இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக 15 வெற்றிகளையும், 13 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வெல்லும்பட்சத்தில் இரு அணிகளும் தலா 87 புள்ளிகளைப் பெறும். எனினும் டெசிமல் புள்ளி அடிப்படையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8-ஆவது இடத்தைப் பிடிக்கும். அதேநேரத்தில் பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் வெல்லும்பட்சத்தில் 7-ஆவது இடத்துக்கு முன்னேறும்.
வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று தரவரிசையில் முதல் 7 இடங்களுக்குள் இருக்கும் அணிகளும், போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணியும் 2019 உலகக் கோப்பை போட்டிக்கு நேரடித் தகுதி பெறும். எஞ்சிய 4 அணிகள் தகுதிச்சுற்றின் மூலம் இறுதி செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com