டேவிஸ் கோப்பை: இந்தியாவுக்கு 2-0 முன்னிலை அளித்த தமிழர்கள்!

தமிழ்நாட்டு டென்னிஸ் வீரர்களான ராம்குமார், பிரஜ்னேஷ் ஆகியோர் இந்திய அணிக்கு...
டேவிஸ் கோப்பை: இந்தியாவுக்கு 2-0 முன்னிலை அளித்த தமிழர்கள்!

டென்னிஸுக்கும் தமிழ்நாட்டுக்கும் நீண்ட நெடிய பாரம்பரியம் உண்டு. ராமநாத கிருஷ்ணன், ரமேஷ் கிருஷ்ணன், விஜய் அமிர்தராஜ், ஆனந்த் அமிர்தராஜ் என முக்கியமான டென்னிஸ் வீரர்களை உருவாக்கிய மாநிலம், தமிழ்நாடு.

இந்த வரிசையில் இணையக்கூடிய நம்பிக்கையை அளித்துள்ளார்கள் தமிழ்நாட்டு டென்னிஸ் வீரர்கள்ளான ராம்குமார், பிரஜ்னேஷ் ஆகியோர். டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான ஆசிய-ஓசியானியா குரூப் 1 போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முதல் நாளில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இந்தியாவின் ராம்குமார், பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் ஆகியோர் வெற்றி கண்டனர்.

 பெங்களூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியின் முதல் ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் ராம்குமார் 6-2, 5-7, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் டெய்முர் இஸ்மெயிலை தோற்கடித்தார். மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் 7-5, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் சஞ்ஜார் ஃபெய்ஸியேவை தோற்கடித்தார். இதன்மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

அரசியல்வாதியாக மட்டுமில்லாமல் முக்கிய டென்னிஸ் நிர்வாகியாக உள்ள கார்த்தி சிதம்பரம் இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டு இளைஞர்களான ராம்குமார், பிரஜ்னேஷ் ஆகிய இருவரும் இந்திய அணி உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முன்னிலை பெற உதவியுள்ளார்கள். சரியான சூழலில் மகேஷ் பூபதி கேப்டனாக உள்ளார் என்று மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com