ஐசிசி கூட்டத்தில் கலந்துகொள்ள என்.சீனிவாசனுக்கு அனுமதி மறுப்பு: உச்ச நீதிமன்றம்

இந்தியா சார்பாக ஐசிசி கூட்டத்தில் என். சீனிவாசன் கலந்துகொள்ளக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஐசிசி கூட்டத்தில் கலந்துகொள்ள என்.சீனிவாசனுக்கு அனுமதி மறுப்பு: உச்ச நீதிமன்றம்

இந்தியா சார்பாக ஐசிசி கூட்டத்தில் என். சீனிவாசன் கலந்துகொள்ளக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகே முழு உறுப்பினர் அந்தஸ்து வழங்குவது, வருவாய் பங்கீட்டில் மாற்றம், டெஸ்ட் போட்டியின் அமைப்பில் மாற்றம் என புதிய சீர்திருத்தங்களை கொண்டு வர ஐசிசி முன்மொழிந்துள்ளது.  இதற்கு பிசிசிஐ உள்ளிட்ட சில நாடுகளின் கிரிக்கெட் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேச ஐசிசி கூட்டத்துக்கு இந்தியாவின் சார்பில் யாரை அனுப்புவது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக ஐசிசியின் சிறப்பு செயற்குழு கூட்டம் சமீபத்தில் தொடங்கியது. அந்தக் கூட்டத்தில் என்.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  லோதா கமிட்டியின் பரிந்துரைப்படி 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிசிசிஐ, மாநில கிரிக்கெட் சங்கங்களின் பொறுப்பில் இருக்க முடியாது. ஆனால் பிசிசிஐ கூட்டத்தில் 70 வயதைக் கடந்த சீனிவாசன், நிரஞ்சன் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து, பிசிசிஐ கூட்டத்தில் பங்கேற்க யாரெல்லாம் தகுதியானவர்கள் என்பது குறித்து உத்தரவு பிறப்பிக்குமாறு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது பிசிசிஐ நிர்வாகக் குழு. 

இது தொடர்பான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது ஐசிசி கூட்டத்தில் இந்தியா சார்பாக பிசிசிஐ இணைச் செயலர் அமிதாப் செளத்ரி கலந்துகொள்ளவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், இந்தக் கூட்டத்தில் என். சீனிவாசன் கலந்துகொள்ளக்கூடாது, அவருடைய நேர்மை கேள்விக்குரியதாக உள்ளதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் கருத்து தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com