டெல்லியை வீழ்த்தியது ஹைதராபாத்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21-ஆவது லீக் ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியைத் தோற்கடித்தது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21-ஆவது லீக் ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியைத் தோற்கடித்தது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்.
ஹைதராபாதில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. அந்த அணியில் கேன் வில்லியம்சன் 51 பந்துகளில் 89 ரன்களும், ஷிகர் தவன் 50 பந்துகளில் 70 ரன்களும் குவித்தனர். டெல்லி தரப்பில் கிறிஸ் மோரீஸ் 4 ஓவர்களில் 26 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டெல்லி தோல்வி: பின்னர் ஆடிய டெல்லி அணியில் சாம் பில்லிங்ஸ் 13 ரன்களில் வெளியேற, சஞ்சு சாம்சனுடன் இணைந்தார் கருண் நாயர். அதிரடியாக ஆடிய இந்த ஜோடி 71 ரன்கள் சேர்த்தது. கருண் நாயர் 23 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் சேர்த்து வெளியேற, பின்னர் வந்த ரிஷப் பந்தை முதல் பந்திலேயே வீழ்த்தினார் யுவராஜ் சிங்.
இதன்பிறகு சாம்சன் 33 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, ஷ்ரேயஸ் ஐயருடன் இணைந்தார் மேத்யூஸ். இந்த ஜோடி 70 ரன்கள் சேர்த்தபோதும், டெல்லி அணியைத் தோல்வியிலிருந்து மீட்க முடியவில்லை.
மேத்யூஸ் 23 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. ஷ்ரேயஸ் ஐயர் 31 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் தரப்பில் முகமது சிராஜ் 2 விக்கெட் வீழ்த்தினார். வில்லியம்சன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com