சென்னை லீக்: இந்தியன் வங்கி வெற்றி

சென்னை லீக் சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டியில் இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்றது.

சென்னை லீக் சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டியில் இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்றது.
செயின்ட் ஜோசப் குழுமம்-சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சென்னை லீக் கால்பந்து போட்டி சென்னை ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்று
வருகிறது.
இதில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஏஜிஓஆர்சி (பொதுக் கணக்காளர் அலுவலகம்) அணியைத் தோற்கடித்து.
இந்தியன் வங்கி தரப்பில் அபியூதுன் ஜோசப் இரு கோல்களையும் (51 மற்றும் 78-ஆவது நிமிடங்களில்), சரவணக்குமார் (34), ஜான் மார்ட்டின் (80) ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர். ஏஜிஓஆர்சி தரப்பில் காளி ஒரு கோல் (41) அடித்தார்.
இந்தியன் வங்கி வீரர் விஜய் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தெற்கு ரயில்வேயும், ஹிந்துஸ்தான் ஈகிள்ஸýம் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com