டெல்லி அபார பந்துவீச்சு: மும்பை 142 ரன்கள் சேர்ப்பு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸýக்கு எதிராக முதலில் பேட் செய்த மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸýக்கு எதிராக முதலில் பேட் செய்த மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது.
மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, பார்த்திவ் படேலும், ஜோஸ் பட்லரும் மும்பையின் இன்னிங்ûஸ தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4 ஓவர்களில் 37 ரன்கள் சேர்த்தது. பார்த்திவ் படேல் 11 பந்துகளில் 8 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்துவீச்சில் போல்டானார்.
இதையடுத்து நிதிஷ் ராணா களமிறங்க, பட்லர் 18 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்த நிலையில் துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார்.
இதன்பிறகு நிதிஷ் ராணா 8, கேப்டன் ரோஹித் சர்மா 5 ரன்களில் நடையைக் கட்ட, கிருனால் பாண்டியா 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கிரண் போலார்டுடன் இணைந்தார் ஹார்திக் பாண்டியா. இந்த ஜோடி 6-ஆவது விக்கெட்டுக்கு 36 ரன்கள் சேர்த்தது. போலார்ட் 29 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து வெளியேற, பின்னர் வந்த ஹர்பஜன் சிங் 2 ரன்களில் ரன் அவுட்டானார்.
ஹார்திக் பாண்டியா 23 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 24 ரன்கள் எடுத்து ரன் அவுட்டாக, மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது. மிட்செல் ஜான்சன் 7, மெக்லீனாகான் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
டெல்லி தரப்பில் அமித் மிஸ்ரா 4 ஓவர்களில் ஒரு மெய்டனை வீசியதோடு, 18 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். பேட் கம்மின்ஸ் 4 ஓவர்களில் 20 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார்.

இன்றைய ஆட்டங்கள்

குஜராத்-பஞ்சாப்
இடம்: ராஜ்கோட்
நேரம்: மாலை 4
கொல்கத்தா-பெங்களூர்
இடம்: கொல்கத்தா
நேரம்: இரவு 8

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com