மும்பைக்கு 6-ஆவது வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25-ஆவது லீக் ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ûஸ தோற்கடித்தது மும்பை இண்டியன்ஸ்.
3 விக்கெட்டுகளை வீழ்த்திய மகிழ்ச்சியில் மெக்லீனாகான்
3 விக்கெட்டுகளை வீழ்த்திய மகிழ்ச்சியில் மெக்லீனாகான்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25-ஆவது லீக் ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ûஸ தோற்கடித்தது மும்பை இண்டியன்ஸ்.
இதன்மூலம் 6-ஆவது வெற்றியைப் பெற்றுள்ள மும்பை அணி 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, பார்த்திவ் படேலும், ஜோஸ் பட்லரும் மும்பையின் இன்னிங்ûஸ தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4 ஓவர்களில் 37 ரன்கள் சேர்த்தது. பார்த்திவ் படேல் 11 பந்துகளில் 8 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்துவீச்சில் போல்டானார்.
இதையடுத்து நிதிஷ் ராணா களமிறங்க, பட்லர் 18 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்த நிலையில் துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார்.
இதன்பிறகு நிதிஷ் ராணா 8, கேப்டன் ரோஹித் சர்மா 5 ரன்களில் நடையைக் கட்ட, கிருனால் பாண்டியா 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கிரண் போலார்டுடன் இணைந்தார் ஹார்திக் பாண்டியா. இந்த ஜோடி 6-ஆவது விக்கெட்டுக்கு 36 ரன்கள் சேர்த்தது. போலார்ட் 29 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து வெளியேற, பின்னர் வந்த ஹர்பஜன் சிங் 2 ரன்களில் ரன் அவுட்டானார்.
ஹார்திக் பாண்டியா 23 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 24 ரன்கள் எடுத்து ரன் அவுட்டாக, மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது. மிட்செல் ஜான்சன் 7, மெக்லீனாகான் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
டெல்லி தரப்பில் அமித் மிஸ்ரா 4 ஓவர்களில் ஒரு மெய்டனை வீசியதோடு, 18 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். பேட் கம்மின்ஸ் 4 ஓவர்களில் 20 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார்.
டெல்லி தோல்வி: பின்னர் ஆடிய டெல்லி அணியில் ஆதித்ய தாரே ரன் எடுக்காமலேயே ரன் அவுட்டாக, சாம்சன் 9, ஷ்ரேயஸ் ஐயர் 6 ரன்களில் நடையைக் கட்டினர்.
இதையடுத்து களமிறங்கிய ஆண்டர்சன், ரிஷப் பந்த் ஆகியோர் ரன் ஏதுமின்றி வெளியேற, கருண் நாயர் 5 ரன்களில் வீழ்ந்தார். இதனால் 6.3 ஓவர்களில் 24 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது டெல்லி அணி.
ஆனால் 7-ஆவது விக்கெட்டுக்கு களம் கண்ட காகிசோ ரபாடா-கிறிஸ் மோரீஸ் ஜோடி அதிரடியாக ஆட, டெல்லி அணி மிக மோசமான நிலையில் இருந்து மீண்டது. இந்த ஜோடி 91 ரன்கள் சேர்த்தபோதும், டெல்லி அணியின் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.
ரபாடா 39 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கிறிஸ் மோரீஸ் 41 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் சேர்க்க, டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.
மும்பை தரப்பில் மெக்லீனாகான் 4 ஓவர்களில் 24 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பூம்ரா 4 ஓவர்களில் 21 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மெக்லீனாகான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இன்றைய ஆட்டங்கள்

குஜராத்-பஞ்சாப்
இடம்: ராஜ்கோட்
நேரம்: மாலை 4

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com