ஓய்வு முடிவில் மாற்றமா? யூனிஸ் கான் மறுப்பு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் தனது முடிவை திரும்பப் பெறும் எண்ணமில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் தனது முடிவை திரும்பப் பெறும் எண்ணமில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி, தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரோடு யூனிஸ் கான் ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார்.
இந்த நிலையில் தேவைப்பட்டால் பாகிஸ்தான் அணியின் நலனுக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறுவேன் என யூனிஸ்கான் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
அதை முற்றிலும் மறுத்துள்ள யூனிஸ்கான், "எனது ஓய்வு முடிவு குறித்து ஏராளமான ஊகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. யூனிஸ் கான் தொடர்ந்து விளையாட விரும்புகிறார் என்றெல்லாம் பரப்புகிறார்கள். அதில் உண்மையில்லை. ஓய்வு பெறுவது என்ற முடிவை நான் சுயமாகவே எடுத்திருக்கிறேன். மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் அனைத்து இன்னிங்ஸ்களிலும் சதமடித்தாலும்கூட, எனது ஓய்வு முடிவில் மாற்றம் இருக்காது. நான் ஏற்கெனவே அறிவித்தபடி மேற்கிந்தியத் தீவுகள் தொடரோடு ஓய்வு பெறுவேன்' என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com