மான்டி கார்லோ மாஸ்டர்ஸ்: 10-ஆவது முறையாக நடால் சாம்பியன்

மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
மான்டி கார்லோ மாஸ்டர்ஸ்: 10-ஆவது முறையாக நடால் சாம்பியன்

மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.

மொனாக்கோவின் மான்டி கார்லோ நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் நடால் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான ஆல்பர்ட் ரேமோஸ் வினோலûஸ தோற்கடித்தார்.
இந்தப் போட்டியில் 10-ஆவது முறையாக சாம்பியனாகியிருக்கிறார் நடால். மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் போட்டியில் 2005 முதல் 2012 வரை தொடர்ச்சியாக 8 முறை சாம்பியன் பட்டம் வென்ற நடால், 2013-இல் ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்தார். கடந்த ஆண்டு இங்கு 9-ஆவது பட்டத்தை வென்றார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில் 10-ஆவது பட்டத்தைக் கைப்பற்றுவதில் தீவிரமாக இருக்கும் நடால், அடுத்ததாக பார்சிலோனா ஓபனில் களமிறங்குகிறார். களிமண் தரையில் மட்டும் இதுவரை 50 பட்டங்களைக் கைப்பற்றியுள்ளார் நடால்.
சாம்பியன் பட்டம் வென்றது குறித்துப் பேசிய நடால், "மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. 2003-இல் இங்கு தகுதி நிலை வீரராக களம் கண்ட நான், அப்போது 3-ஆவது சுற்று வரை முன்னேறினேன். ஆனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இங்கு 10-ஆவது சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறேன். இத்தனை பட்டங்கள் வெல்வேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. எனக்கு இந்த அற்புதமான வாய்ப்பை தந்ததற்காக வாழ்க்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.


போபண்ணா ஜோடி சாம்பியன்

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-உருகுவேயின் பாப்லோ கியூவாஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த ஜோடி தங்களின் இறுதிச் சுற்றில் 6-3, 3-6, 10-4 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பெலிஸியானோ லோபஸ்-மார்க் லோபஸ் ஜோடியைத் தோற்கடித்தது.
இந்த சீசனில் போபண்ணாவும்-பாப்லோ கியூவாஸூம் இணைந்து வென்ற முதல் பட்டம் இது. அதேநேரத்தில் இந்த சீசனில் 2-ஆவது பட்டத்தை வென்றிருக்கிறார் போபண்ணா. முன்னதாக கடந்த ஜனவரியில் நடைபெற்ற சென்னை ஓபனில் ஜீவன் நெடுஞ்செழியனுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றார் போபண்ணா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com