குஜராத் அணியில் இர்ஃபான் பதான்

குஜராத் லயன்ஸ் அணியில் இருந்து விலகியுள்ள டுவைன் பிராவோவுக்கு பதிலாக, இர்ஃபான் பதான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குஜராத் அணியில் இர்ஃபான் பதான்

குஜராத் லயன்ஸ் அணியில் இருந்து விலகியுள்ள டுவைன் பிராவோவுக்கு பதிலாக, இர்ஃபான் பதான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இடது தொடை காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிராவோ, அதன் தாக்கத்திலிருந்து முழுவதும் மீள்வதற்காக இந்த ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில், அவருக்குப் பதிலாக இர்ஃபான் பதான் அணியில் குஜராத் லயன்ஸ் அணியில் இணைந்துள்ளார். முன்னதாக, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் ஏலத்தின்போது எந்தவொரு அணியும் பதானை தேர்வு செய்யவில்லை.
அவருக்கு ரூ.50 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டு, இருமுறை அவர் ஏலத்தில் பங்கேற்றபோதும் அவரை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை. முந்தைய 9 ஐபிஎல் சீசன்களில் 102 ஆட்டங்களில் விளையாடியுள்ள இர்ஃபான் பதான், 1,137 ரன்கள் சேகரித்ததுடன், 80 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
முந்தைய சீசன்களில், பஞ்சாப், டெல்லி, சென்னை, ஹைதராபாத், புணே ஆகிய அணிகளுக்காக அவர் விளையாடியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com