உத்தப்பா அதிரடி: கொல்கத்தா வெற்றிக்கொடி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 30-ஆவது லீக் ஆட்டத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயண்ட்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
உத்தப்பா அதிரடி: கொல்கத்தா வெற்றிக்கொடி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 30-ஆவது லீக் ஆட்டத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயண்ட்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
இரு அணிகளுக்கு இடையே புணேவில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த புணே 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய கொல்கத்தா 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து வென்றது. கொல்கத்தா வீரர்கள் ராபின் உத்தப்பா, கம்பீர் ஆகியோர் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். ராபின்உத்தப்பா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
முன்னதாக, டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து பேட் செய்த புணேவில் ரஹானே, ராகுல் திரிபாதி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
இருவருமே நிதானமாக ஆடி ரன் சேகரிப்பில் ஈடுபட்ட நிலையில், ராகுல் திரிபாதி அவுட் ஆனார்.
23 பந்துகளைச் சந்தித்த அவர் 7 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பியூஷ் சாவ்லாவின் பந்துவீச்சில் போல்டானார்.
அவரை அடுத்து கேப்டன் ஸ்மித் களத்துக்கு வந்தார். மறுமுனையில் அரைசதத்தை நெருங்கிய ரஹானேவை ஆட்டமிழக்கச் செய்தார் சுனீல் நரைன். 41 பந்துகளை சந்தித்திருந்த ரஹானே 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சுனீலின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பாவிடம் கேட்ச் ஆனார்.
இதையடுத்து தோனி களமிறங்கினார். சற்று அதிரடி காட்டிய அவர் 11 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவர், குல்தீப் யாதவின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பாவிடம் கேட்ச் கொடுத்தார்.
அடுத்து வந்த மனோஜ் திவாரி 2 பந்துகளை சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நின்றிருந்த ஸ்டீவன் ஸ்மித் அரைசதம் கண்டார்.
மனோஜ் திவாரியை தொடர்ந்து வந்த டேனியல் கிறிஸ்டியன் 6 பந்துகளை சந்தித்து 2 சிக்ஸர்களுடன் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டத்தின் கடைசி பந்தில் அவுட் ஆனார்.
உமேஷ் யாதவ் வீசிய பந்தை அவர் மணீஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்தார்.
இவ்வாறாக 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது புணே அணி. ஸ்மித் 37 பந்துகளுக்கு 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 51 ரன்களுடன் களத்தில் இருந்தார். கொல்கத்தா தரப்பில் குல்தீப் யாதவ் 2, உமேஷ் யாதவ், சுனீல் நரைன், பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
உத்தப்பா அதிரடி: இதையடுத்து 183 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தாவில் தொடக்க வீரர் சுனீல் நரைன் 11 பந்துகளுக்கு 3 பவுண்டரிகளுடன் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ராபின் உத்தப்பா, கேப்டன் கம்பீருடன் இணைந்து அதிரடி காட்டினார்.
26 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் அவர் அரைசதம் கடந்தார். மறுமுனையில் கம்பீர் 35 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் அரைசதம் அடித்தார்.
அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்திய உத்தப்பா, 47 பந்துகளுக்கு 7 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து டேரன் பிராவோ களம் இறங்க, மறுமுனையில் கம்பீர் 46 பந்துகளுக்கு 6 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் மணீஷ் பாண்டே களம் காண, அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவையிருந்த நிலையில் ஒரு பவுண்டரி விளாசி ஆட்டத்தை முடித்தார் டேரன் பிராவோ.
18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து வென்றது கொல்கத்தா. டேரன் பிராவோ 6 ரன்களுடனும், மணீஷ் பாண்டே ரன்கள் இன்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். புணே தரப்பில் உனத்கட், கிறிஸ்டியன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.


இன்றைய ஆட்டம்
பெங்களூர்-குஜராத்
இடம்: பெங்களூரு, நேரம்: இரவு 8
நேரடி ஒளிபரப்பு:
சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com