ஐஓசி ஆணையங்களின் உறுப்பினராக நீதா அம்பானி நியமனம்

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) 2 ஆணையங்களுக்கான உறுப்பினராக நீதா அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார்.சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கீழ் 26 ஆணையங்கள் உள்ளன.
ஐஓசி ஆணையங்களின் உறுப்பினராக நீதா அம்பானி நியமனம்

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) 2 ஆணையங்களுக்கான உறுப்பினராக நீதா அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கீழ் 26 ஆணையங்கள் உள்ளன. அவற்றில் 2017-ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் கல்வி ஆணையம் மற்றும் ஒலிம்பிக் தொலைக்காட்சி சேனல் ஆணையம் ஆகியவற்றின் உறுப்பினராக நீதா அம்பானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதில், அமெரிக்க ஒலிம்பிக் சங்கத் தலைவர் லாரன்ஸ் ஃபிரான்சிஸ் பிரோப்ஸ்ட் தலைமையிலான ஒலிம்பிக் சேனல் குழுவில் நீதா அம்பானியுடன் சேர்த்து 16 உறுப்பினர்கள் உள்ளனர். அந்த ஆணையத்தில் உறுப்பினராக இருந்த சர்வதேச பாரா ஒலிம்பிக் கமிட்டி தலைவர் பிலிப் கிரேவனுக்கு பதிலாக, தற்போது நீதா அம்பானி உறுப்பினராக்கப்பட்டுள்ளார்.
ஆண்டுதோறும் ஒலிம்பிக் தொடர்பான தகவல்கள், நிகழ்ச்சிகளை வழங்கும் அந்த ஒலிம்பிக் சேனல் கடந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியின்போது அறிமுகம் செய்யப்பட்டது. அந்தச் சேனல் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
அதேபோல், நீதா அம்பானி உறுப்பினராக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் கல்வி ஆணையம், ஐஓசி உறுப்பினரும், நியூஸிலாந்தைச் சேர்ந்தவருமான பேர்ரி ஜான் மெய்ஸ்டர் தலைமையில் இயங்கி வருகிறது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் இடம்பிடித்த முதல் இந்தியப் பெண் என்ற பெருமையப் பெற்றுள்ள நீதா அம்பானி, தற்போது அந்த கமிட்டியின் முக்கிய இரு ஆணையங்களின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக தனது 70-ஆவது வயது வரையில் நீடிப்பார்.
இதனிடையே, ஐஓசியின் தடகள ஆணையத்துக்கான உறுப்பினராக இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com